யாரும் பேசப்படாது: கார்த்திக் திடீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பார்வர்ட் பிளாக் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து கட்சியினர்யாரும் பேசக் கூடாது என்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலத்தலைவரான நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது காணாமல் போய், தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு இப்போது திடீர் எனஞானோதயம் வந்து கார்த்திக் விடுத்துள்ள அறிக்கை:

இயக்கத்தின் கோட்பாட்டின்படி நமது இயக்கத் தலைமையின் எழுத்துப்பூர்வமானஅதிகாரம் இல்லாமல், எந்தவித பேட்டியோ, அறிக்கையோ அளிக்கக் கூடாது.ஆனால் அதை மீறி சிலர் தலைமையுடன் கலந்து ஆலோசிக்காமல் தனித்துப் பேட்டிகொடுத்திருக்கிறார்கள்.

அவையெல்லாம் சொந்தக் கருத்தாகுமே தவிர இயக்கத்தின் நிலையானது. இந்தச்செயல் வருந்தத்தக்கது. குறிப்பாக கூட்டணியைப் பற்றிப் பேச இவர்களுக்கு எந்தஅதிகாரமும் கிடையாது. இப்போது அதற்கான அவசியம் இல்லை.

மாநிலத் தலைமையிலிருந்து அடுத்து அறிக்கை வரும் வரை இவர்களுடன் யாரும்தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கட்சியின் முக்கிய செயல்பாடுகளையும், வளர்ச்சி குறித்தும், எதிர்காலநடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டங்கள் டிசம்பர் மாதம் 2வது வாரத்தில்நடைபெறவுள்ளது.

மதுரை மாநகரில் டிசம்பர் 20, 21 ஆகிய நாடுகளில் மாநில தொழிற்சங்க மாநாடுநடைபெறுகிறது. அதில் அகில இந்திய நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நமது இயக்கம் புது உற்சாகத்துடன் மீண்டும் செயல்படும். இம்மாதம் சென்னையில்அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தின் போது பார்வர்ட் பிளாக் (வல்லரசு) இயக்கத்தை அதன் தலைவர்பி.வி.கதிரேசன் மற்றும் நிர்வாகிகள், தாய் கழகமான அகில இந்திய பார்வர்ட் பிளாக்கட்சியுடன் நிபந்தனையற்ற முறையில் இணைத்துக் கொண்டனர் என்று கூறியுள்ளார்கார்த்திக்.

சில கால ஓய்வுக்குப் பின்னர் நடிகர் கார்த்திக் திரைப்படம் ஒன்றை இயக்கும்முயற்சியில் இறங்கியுள்ளார். அதில் அவரது மகன்தான் ஹீரோவாம். பட இயக்கம்தொடர்பான பணியில் அவர் படு பிசியாக உள்ளார் என்கிறது கார்த்திக்குக்குநெருங்கிய வட்டாரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+