போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர புலிகள் விருப்பம்
கொழும்பு:போர் நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து விட்டதாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்திட்டவட்டமாக அறிவித்துள்ள போதிலும், அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க புலிகள் தயாராக உள்ளதாக அதன்அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்தின்போது பிரபாகரன் ஆற்றிய உரையில், இனிமேல் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வாக இருக்கமுடியும். போர் நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து விட்டது என்று அறிவித்தார். இதனால் பெரிய அளவில் போர்வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கதி என்னஎன்பது குறித்து விளக்குமாறு நார்வே தலைமையிலான போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் இலங்கை அரசுவிளக்கம் கேட்டது. இதையடுத்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழச் செல்வனைசந்தித்து இதுகுறித்துப் பேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முடிவு செய்தது.
அதன்படி, கிளிநொச்சிக்குச் சென்ற ஜான் ஆஸ்கர் சொல்ன்ஸ் தலைமையிலான போர் நிறுத்தக் குழுவினர் தமிழ்ச்செல்வனை சந்தித்துப் பேசினர். சந்திப்புக்குப் பின்னர் தூதுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தொர்பின்னூர்ஓமர்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர புலிகள் ஆர்வமாக உள்ளனர். அதைதொடர்ந்து கடைப்பிடிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அமைதித் தீர்வு ஏற்பட நார்வே தூதுக் குழுவின் முயற்சிகள் தொடர வேண்டும், போர் நிறுத்தக் குழுவின்பணிகளும் தொடர வேண்டும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர வேண்டும் என்பதில் புலிகள் ஆர்வத்துடன்உள்ளனர். அதை முறித்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை.
இதை நாங்கள் சாதகமான திருப்பமாக கருதுகிறோம். புலிகளின் இந்த கருத்தை அரசிடம் நாங்கள் தெரிவித்துவிட்டோம். அரசும் புலிகளின் இந்த முடிவை வரவேற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் ஏ9 சாலையை மூடியது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் இலங்கைபடையினர் தாக்குதலில் ஈடுபடுவது ஆகியவையே புலிகளை ஆத்திரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக போர்நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து விட்டதாக அதன் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார்.
இருப்பினும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடருவதில் புலிகள் ஆர்வமாகவே உள்ளனர் என்றார் ஓமர்சன். போர்நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க புலிகள் ஆர்வமாக இருப்பதாக போர் நிறுத்தக் குழு தெரிவித்துள்ளதுநிலைமையின் பதட்டத்தைக் குறைக்க உதவும் என கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications