கேரளா மீது பொருளாதார தடை-நெடுமாறன்
மதுரை:முல்லைப் பெரியாறு அணையை உயர்த்தும் விவகாரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கேரள அரசுக்குகண்டனம் தெரிவித்து, பெரியாறு அணை உரிமை மீட்பு இயக்கம் சார்பில் வருகிற டிசம்பர் 4ம் தேதி கோவை,கம்பம், செங்கோட்டை ஆகிய இடங்களில் கேரளாவுக்கு எதிராக பொருளாதார தடைப் போராட்டம்நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழர் தேசிய இயக்கத் தலைவருமானபழ.நெமாறன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் எனகேரளாவை வலியுறுத்தும் வகையில்தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்தப் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்கவேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க உயரத்தை 142 அடியாக அதிகரிக்க வேண்டியது அவசியம். கடந்த20 ஆண்டுகளாக தண்ணீரை 136 அடி மட்டுமே தேக்கி வைத்து வருவதால், மதுரை உள்ளிட்ட ஐந்து வறண்டதென் மாவட்டங்களிலும் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது கூட அணையின் உயரத்தை கேரள அரசு அதிகரிக்க மறுத்தால் இங்கே நிலைமை மோசமாகி விடும்.
மத்திய நீர் ஆணையம் தெரிவித்த வழிகாட்டுதல்களின்படி தமிழக அரசு, பெரியாறு அணையைப்பலப்படுத்தியது. ஆனால் அப்படி செய்தும் கூட கேரள அரசு பிடிவாதப் போக்கை கடைப்பிடித்து வருவது கடும்கண்டனத்துக்குரியது.
கேரள அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து கோவை, கம்பம், செங்கோட்டை ஆகிய 3 இடங்களில் கேரளாவுக்குஎதிராக பொருளாதாரத் தடை போராட்டத்தை நடத்தவுள்ளோம். கம்பத்தில் நடக்கும் போராட்டத்திற்கு நான்தலைமை தாங்கவுள்ளேன் என்றார் நெடுமாறன்.
இந்தப் போராட்டத்தின்போது கேரளாவுக்குச் செல்லும் தமிழக அரசி, காய்கறி, பருப்புகள், பழங்கள், முட்டை,இறைச்சி லாரிகள் தடுத்து நிறுத்தப்படவுள்ளன. உணவுத் தேவைக்கு கேரளா தமிழகத்தைத் தான் அண்டியுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
பெரியாறு அணை உரிமை மீட்பு இயக்கத்தில் மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும்இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications