போலீஸாரை ஏமாற்றிவிட்டு தப்பிய லஞ்ச எஸ்ஐ
சென்னை:லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட சப் இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரை ஏமாற்றி விட்டு தன்மீது புகார் கொடுத்தவரையும் கடத்திக் கொண்டு தப்பி ஓடிய பரபரப்பு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
எழும்பூர் குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சதானந்தன். இவரிடம் ஏர் டெல் நிறுவனம் சார்பில் ஒருபுகார் கொடுக்கப்பட்டது. எழும்பூர் அல்சா மால் என்ற வணிக வளாகத்தில் நிறுவனம் நடத்தி வருபவர் நடேசன்.ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் பில் பாக்கி வைத்துள்ளார். இதை வசூலித்துத் தரும்படிசதானந்தனிடம் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நடேசனை காவல் நிலையத்துக்கு வரவழைத்தார் சதானந்தன். முறையாக விசாரிக்காமல், கட்டப்பஞ்சாயத்தில் இறங்கினார். அவரிடம் பேசி ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தைப் பெற்றார். அதில் ரூ. 50 ஆயிரம்பணத்தை மட்டும் ஏர் டெல் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்.
பின்னர் மீண்டும் நடேசனைக் கூப்பிட்டு இன்னும் ரூ. 70 ஆயிரம் கொடு என்று கூறியுள்ளார். ஆனால் பணம் தரமறுத்துள்ளார் நடேசன். பணம் கொடுக்காவிட்டால் கைதுதான் என்று மிரட்டியுள்ளார் சதானந்தன். பயந்து போனநடேசன் பணத்தைக் கொடுத்துள்ளார்.
அத்தோடு விடாத சதானந்தன் இன்னும் ரூ. 10,000 கொடுக்க வேண்டும். அப்போதுதான் வழக்குப் போடாமல்விட்டு விடுவேன் என்று கூறியுள்ளார். இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் தாளித்து விடுவார் சதானந்தன்என்று முடிவு செய்த நடேசன், லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் கொடுத்தார்.
பின்னர் அவர்கள் கூறிய யோசனைப்படி 10,000 பணத்துடன் காவல் நிலையம் சென்றார். அங்கு சதானந்தனிடம்பணத்தைக் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சதானந்தனை வளைத்துப்பிடித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சதானந்தன் சட்டென சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.போகும்போது நடேசனையும் இழுத்துக் கொண்டு ஓடினார். இதை எதிர்பார்க்காத லஞ்ச ஒழிப்பு போலீஸார்சதானந்தனை துரத்தினர். ஆனால் படு வேகமாக ஓடிய சதானந்தன், மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டுதப்பினார்.
சிறிது தூரம் போனவுடன் நடேசனை விட்டு விட்டு அவர் மட்டும் தப்பி விட்டார். அங்கிருந்து நடந்து காவல்நிலையம் வந்து சேர்ந்தார் நடேசன். தப்பி ஓடிய சதானந்தன் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சென்னை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications