கிரிக்கெட்: ஒரு வழியாக இந்தியா வெற்றி

Subscribe to Oneindia Tamil

ஜோகன்னஸ்பர்க் :தென் ஆப்பிரிக்க அணியிடம் ஒரு நாள் தொடரை பறிகொடுத்த இந்தியா, நேற்றுநடந்த 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தனது முதல் வெற்றியைருசித்துள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்ற 20-20 ஓவர்கள் போட்டிஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்தது. இந்தப் புதிய முறை கிரிக்கெட் போட்டி பிரபலமாகிவருகிறது.

இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் விளையாட வேண்டும். இந்தப் போட்டியில்அதிரடியாக ரன் குவிக்க வீரர்கள் முனைவார்கள் என்பதால் ஆட்டம் படுவிறுவிறுப்பாக இருக்கும்.

இப்படிப்பட்ட புதுமையான போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்தித்தது இந்தியா.முதலில் தென் ஆப்பிரிக்கா பேட் செய்தது. இந்திய பந்து வீச்சாளர்களின் வேகத்தைசமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா திணறியது.

கேப்டன் ஸ்மித் வழக்கம் போல இந்தப் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. 16ரன்களில் அவர் ஜாகிர் கானிடம் வீழ்ந்தார். 20-20 போட்டிகளில் முதல் சதம்அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றவரான போஸ்மன் 1 ரன் எடுத்துவெளியேறினார்.

அதிரடி வீரரான கிப்ஸ் 7 ரன்களும், கெம்ப் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.முன்னணி வீரர்கள் வெளியேறியதால் தென் ஆப்பிரிக்கா ரன் எடுக்க முடியாமல்தடுமாறியது. இருப்பினும் மார்க்கல் 27 ரன்கள், வான்டர் வாத் 21 ரன்களும் எடுத்துசரிவை சற்றே தடுத்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 126 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்ஆனது. இதையடுத்து இந்திய அணியின் பேட்டிங் தொடங்கியது.

ஷேவாக், டெண்டுல்கர் இருவரும் களம் இறங்கினர். ஷேவாக் அடித்து ஆடினார்.சச்சின் 11 பந்துகளில் 10 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாகஆடிய ஷேவாக் 29 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார்.

அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட டோணி ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். தினேஷ் மோங்கியாவும், கார்த்திக்கும் இணைந்தபோதுதான்ஆட்டத்தில் அனல் பறந்தது. இருவரும் அதிரடியாக ஆடினர்.

38 ரன்கள் எடுத்த நிலையில் மோங்கியா அவுட் ஆனார். ஆனால் கார்த்திக் தொடர்ந்துசிறப்பாக ஆடினார். கடைசி ஓவரில் மொத்தம் 9 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்றநெருக்கடி ஏற்பட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட கார்த்திக் அபாரமான சிக்ஸர்அடித்து அணியின் வெற்றி இலக்கை சுளுவாக்கினார்.

இறுதியில், 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்து 6 விக்கெட்வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அதிரடியாக ஆடி, அணிக்கு வெற்றி தேடித் தந்த கார்த்திக் ஆட்ட நாயகனாகதேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாளை இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி ஒரு நாள் போட்டிநடைபெறவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+