தேனியில் விஜய்காந்த் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
தேனி:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தை கண்டித்து தேமுதிக சார்பில் அதன் தலைவர் விஜய்காந்த்தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த உண்ணாவிரதத்தை கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தொடங்கி வைத்தார். தேனி மெயின்ரோட்டில் நடக்கும் இந்த் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர்பங்கேற்றனர்.
விஜய்காந்தின் மச்சானும் கட்சியின் முக்கிய தலையுமான சுதீசும் இதில் பங்கேற்றனர்.
அதே போல மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை உள்பட பல மாவட்டத் தலைநகர்களிலும்தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்தன. திருச்சியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி உண்ணாவிரதத்தில்அமர்ந்துள்ளவர்கள் கோஷம் எழுப்பினர்.












Click it and Unblock the Notifications