சென்னை-நைஜீரிய பெண்ணுக்கு அரிய ஆபரேஷன்
சென்னை:நைஜீரியாவைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு சென்னை மருத்துவனையில் மிகவும் அரிய இருதய அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்தவர் டாங்கோ அஷாபி குதிரத். இவருக்கு சிறு வயதிலிருந்தே இதயத்தில் பிரச்சினைஇருந்தது. இவரது இருதய குழாய்களில் ரத்தம் சரியான பாதையில் போகாமல், மித்ரல் வால்வ் பகுதியில் கசிவுஏற்பட்டு, அந்தக் குழாய் சுருங்கிக் காணப்பட்டது.
இதன் காரணமாக வழக்கமான அளவை விட ஐந்து மடங்கு பெரியதாக குதிரத்தின் இதயம் காணப்பட்டது.இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்து வந்தன. மேலும் அவரது நுரையீரலில் நீர்தேங்கியும் பிரச்சினை ஏற்பட்டது.
உடனடியாக அவரது மித்ரல் வால்வ் குழாயை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்துகுதிரத்தை பரிசோதித்துப் பார்த்த அவரது உறவினரும், இங்கிலாந்து மருத்துவருமான டாக்டர் இத்ரிஸ் யெக்கினி,சென்னையில் உள்ள ஹார்வி சூப்பர் ஸ்பெஷாலிட்டிஸ் மருத்துவமனைக்கு குதிரத்தை அனுப்பி வைத்தார்.
குதிரத்திற்கு இதயக் குழாய் திருத்த அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் நரேஷ்குமார் தலைமையிலானடாக்டர்கள் குழு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்த இந்த அறுவைச்சிகிச்சையின்போது ரத்தக் கசிவு ஏற்பட்ட மித்ரல் வால்வ் குழாய் அகற்றப்படாமல், ரிப்பேர் செய்து சரிசெய்யப்பட்டது.
மித்ரல் வால்வடோமி, பாப்பில்லடோமி, ரிங் அன்னுலோபிளாஸ்டி ஆகிய முறைகள் மூலம் கசிவு ஏற்பட்டிருந்தமித்ரல் வால்வ் சரி செய்யப்பட்டதாக டாக்டர் நரேஷ்குமார் தெரிவித்தார். இது மிகவும் அரிய வகை அறுவைச்சிகிச்சை என்றும் கூறிய அவர், மித்ரல் வால்வ் குழாயை அகற்றி புதிய குழாயை பொருத்தினால் எதிர்காலத்தில்குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டி வரும்.
அதனால்தான் பழுதடைந்த குழாயை சரி செய்ய முடிவு செய்தோம் என்றார். குதிரத் தற்போது பூரணமாகசரியாகியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications