பெரியாறு: 10ம் தேதி அதிமுக கண்டன கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு செயல்படும் விதத்தைக்கண்டித்து வருகிற 10ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலை நகரங்களில்கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையில்கடந்த 1979ம் ஆண்டு முதல் 152 அடியிலிருந்து 136 அடியாக நீரைக் குறைத்துதேக்கி வைக்க அனுமதித்து வருகிறது கேரள அரசு.

இதை மாற்ற கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்பயனாக, 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் இந்த உத்தரைவ நிறைவேற்றாமல் கருணாநிதி தலைமையிலான திமுகசிறுபான்மை அரசு மெத்தனமாக இருந்து வருகிறது.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் திசை திருப்பும் முயற்சியிலும் கருணாநிதி அரசுஈடுபட்டுள்ளது. இதன் மூலம் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கருணாநிதிதுரோகம் இழைத்து வருகிறார்.

சமீபத்தில் பெய்த கன மழையால் வந்த அதிகப்படியான நீரை சேமிக்க திமுக அரசுநடவடிககை எடுக்கவில்லை. இதனால் உபரி நீர் கடலுக்குப் போய் வருகிறது.

திமுக அரசின் போக்கைக் கண்டித்து வருகிற 10ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில்அதிமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+