ஈராக்: குண்டுவெடிப்பு-விபத்தில் 111 பேர் பலி
பாக்தாத்:ஈராக்கில் நடந்த 3 கார் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 91 பேரும், லாரி ஒன்று பேருந்து நிறுத்தத்தில்காத்திருந்தவர்கள் மீது மோதியதில் 20 பேரும் பலியாயினர். இதனால் ஈராக்கில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
ஈராக்கில் தொடர்ந்து கார் குண்டுவெடிப்புகளும், மனித வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. மத்திய பாக்தாத்தில் ஷியா முஸ்லீம்கள் அதிகம் உள்ள மார்க்கெட்டில் நடந்த 3 கார்குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 91 பேர் உயிரிழந்தனர்.
சட்ரியா என்ற இடத்தில் உள்ள மார்க்கெட்டிலும் அதற்கு அருகே உள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து 3 கார்குண்டுகள் வெடித்தன. இதில் 91 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 12க்கும்மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. மார்க்கெட்டில் இருந்த கடைகள் தீக்கிரையாகி விட்டன.
இதேபோல பாக்தாத்தின் மற்றொரு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது வேகமாக வந்த லாரி ஒன்றுமோதியதில் 20 பேர் உயிரிழந்தனர். இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கக் கூடும் என போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications