நாளை கேரள பொருளாதார தடை போராட்டம்
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட நாளை நடைபெறும்கேரளாவுக்கு எதிரான பொருளாதார தடை போராட்டத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் தவிரபொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கேரள அரசின் பிடிவாதத்தின் காரணமாக முதல்வர்கள்பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதற்கு கேரளம் தயாராக இல்லைஎன்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் கேரளத்திற்கு எதிரான பொருளாதாரத் தடைப் போராட்டத்தை நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை.
திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளத்திற்கு எதிரான ஒரு நாள் அடையாளபொருளாதாரத் தடை மறியலை, 15 கட்சிகளும், 39 விவசாய சங்கங்களும், 50க்கும் மேற்பட்ட தமிழ்அமைப்புகளும் இணைந்து கோவை, கம்பம், செங்கோட்டை ஆகிய இடங்களில் நடத்தவுள்ளன. பொதுமக்களும்இதில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இதில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைக்கிறேன். துளிக்கூட வன்முறைக்கு இடம் அளிக்காதஅளவுக்கு அறவழிப் போராட்டமாக இதை நடத்த கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications