பாக். ராணுவத்தில் அணு ஏவுகணைகள் சேர்ப்பு
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டுத் தொழில்நுட்பத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள்அந்நாட்டின் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், தலைமை தளபதி ஜெனரல் ஈசான் உல் ஹக் பேசுகையில், உறுதியானபாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் இருப்பதற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அந்தநோக்கத்தில்தான் பாதுகாப்புப் படை வளர்ச்சித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆயுதப் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் ராணுவம் மேலும்வலுவடைந்துள்ளது.
பாகிஸ்தான் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் நாட்டின் ஒருங்கிணைந்த பாதுகாப்பைவலுப்படுத்தியுள்ளது. இது ஒரு முக்கியமான சாதனையாகும். பாதுகாப்பில் தன்னிறைவு அடைவதேபாகிஸ்தானின் தேசியக் கொள்கையாகும்.
வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ராணுவத்தில் சேர்த்துள்ளதன் மூலம் நாட்டின் வான்வெளி முழுவதும்பாதுகாக்கப்பட்ட வளையத்தின் கீழ் வந்துள்ளது என்றார் ஹக்.நிகழ்ச்சியின்போது இந்த ஏவுகணைகளை ராணுவத்தின் நான்கு பிரிவு தளபதிகளிடம் ஹக் ஒப்படைத்தார்.
பாகிஸ்தான் விஞ்ஞானிகள் சமீபத்தில் காவ்ரி, ஷாஹின் வகை ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதித்துப் பார்த்ததுநினைவிருக்கலாம். அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய திறன் பெற்றவை இந்த ஏவுகணைகள் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications