பெரியாறு: திமுகவின் சுய நலம்-விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

தேனி:முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் திமுக சுயநலப் போக்குடன் செயல்படுகிறது என தேமுதிகதலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழக, கேரள மற்றும் மத்திய அரசுகளின் போக்கைக் கண்டித்துதமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

தேனியில் நடந்த போராட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அங்குள்ள மாவட்ட தேமுதிக அலுவலகம்முன்பு போடப்பட்ட மேடையில் இருந்தபடி உண்ணாவிரதம் இருந்தார் விஜயகாந்த்.

மாலை 5.10 மணிக்கு உண்ணாவிரதத்தை இளநீர் அருந்தி முடித்துக் கொண்டார் விஜயகாந்த். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணை விவகாரத்தில் சுய நலப் போக்குடன் திமுக அரசுசெயல்படுகிறது. தமிழக அரசு மட்டுமல்லாது கேரள அரசும், மத்திய அரசும் தங்களது பொறுப்பை மறந்துஅலட்சியமாக செயல்படுகின்றன.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் தேமுதிக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

தமிழக விவசாயிகள் நலனையும், தமிழகத்தின் உரிமையையும் பாதுகாக்கும் வகையில் முதல்வர் கருணாநிதிஉறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியமாக நடந்து கொள்கிறார். உறுதிாயக செயல்படத்தயங்குகிறார்.

என்.எல்.சி. பிரச்சினையின்போது அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாநிதி மிரட்டி மத்தியஅரசைப் பணிய வைத்தார். ஆனால் பல லட்சம் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கத் தயங்குகிறார். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில கருணாநிதியும், திமுகவும், திமுக அரசும் ஏன் இப்படி அலட்சியமனோபாவத்துடன், அமைதி காத்துக் கிடக்கின்றன என்பது புரியவில்லை.

பதவி என்பது தோளில் போட்ட துண்டு என்றெல்லாம் பேசியவர் கருணாநிதி. இப்போது மக்களுக்காக அந்தத்துண்டை உதறிப் பாட தயங்குவது ஏன்?.

முதல்வர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையிலேயே உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில்அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் என்ன உடன்பாடு ஏற்பட்டு விடப் போகிறது?

தண்ணீர்ப் பிரச்சினையில் அனைத்து தேசியக் கட்சிகளும் தமிழகளை வஞ்சித்து விட்டன, துரோகம் இழைத்துவிட்டன. அடுத்த முறை அவர்கள் வாக்கு கேட்க வந்தால் தயவுசெய்து யாரும் ஓட்டுப் போடாதீர்கள். மாநிலஉரிமையைப் பாதுகாக்கத் தவறிய தேசிய கட்சிகள் மக்களிடம் ஓட்டு வாங்க எந்த அருகதையும் கிடையாதுஎன்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+