ரிலையன்ஸ் வசம் போகுமா டாஸ்மாக்?
சென்னை:ரிலையன்ஸ் குழும அதிபரான முகேஷ் அம்பானி முதல்வர் கருணாநிதியை சந்தித்துசென்னையில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் கேஸ் சப்ளை செய்யும் திட்டம்குறித்து விவாதித்தார்.
கருணாநிதியை அவரது கோபாலபுலம் இல்லத்தில் சந்தித்து அம்பானி பேசினார்.சுமார் அரை மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பின் அம்பானி செய்தியாளர்களிடம்கூறியதாவது:
ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றப் படுகையில் இயற்கை எரிவாயு அதிக அளவில்உள்ளது. அதை எடுத்து குழாய்கள் மூலம் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு நேரடியாககேஸ் வினியோகம் செய்யும் திட்டம் குறித்து முதல்வருடன் ஆலோசித்தேன்.
இந்தத் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தால், 3 ஆண்டுகளுக்குள் குழாய் பதிக்கும் பணிமுடிவடையும்.
தற்போது உள்ள திரவ பெட்ரோலிய கேஸை (எல்பிஜி) விட , இயற்கை எரிவாயுவின்விலை 30 சதவீதம் குறைவாகவே இருக்கும்.
இதேபோல தமிழக விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றவும் ரிலையன்ஸ்நிறுவனம் விரும்புவதை முதல்வரிடம் தெவித்தேன். இரண்டு திட்டங்களையும்முதல்வர் வரவேற்று, ஆதரவு தருவதாக தெரிவித்தார் என்றார் முகேஷ்.
உடன் இருந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், இயற்கை எரிவாயுவைசமையலுக்கு மட்டுமல்லாமல், வாகனங்களுக்கும் எரிபொருளாக பயன்படுத்தமுடியும் என்றார்.
தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை காண்டிராக்டில் எடுத்துநடத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில்அம்பானி-கருணாநிதி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications