சிறுமிகளிடம் சில்மிஷம்: பாதிரியார் மீது புகார்
சென்னை:சிறுமிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து வருவதாக பாதிரியார் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை செயின்ட தாமஸ் மவுண்ட் பகுதியை சேர்ந்த சகாயமேரி. இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருபுகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது,
செயின்ட தாமஸ் மவுண்ட் பகுதியில் போபர்ஸ் ஜெயராஜ் (60) என்ற பாதிரியார் தனியாக ஜெபக்கூடம் அமைத்துபிரசங்கங்கள் செய்து வருகிறார். இவர் தெருவில் விளையாடி கொண்டிருந்த எனது 12 வயது மகளை தனதுவீட்டுக்கு அழைத்து சென்று செக்ஸ் கொடுமை செய்து இருக்கிறார்.
இதனால் எனது மகள் தினமும் இரவு பாதியில் எழுந்து அலறுகிறாள். இதேபோல எங்கள் பகுதியில் பலசிறுமிகளை அழைத்து சென்று செக்ஸ் கொடுமை செய்து இருக்கிறார். அந்த பாதிரியாருக்கும் குழந்தைகள்இருக்கிறார்கள். அவர் தனது குழந்தைகளை அனுப்பி தெருவில் விளையாடும் சிறுமிகளை வீட்டுக்கு அழைத்துவர வைத்து இத்தகைய கொடுமைகளை செய்கிறார்.
அவர் மீது நான் செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த செயின்ட் தாமஸ் மவுண்ட் துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications