நெடுமாறன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது
தேனி:கேரளாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைப் பெரியாறு அணை உரிமைமீட்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு உரிமை மீட்புக் குழு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் கோவை, கம்பம், செங்கோட்டை ஆகிய இடங்களில்கேரள மாநிலத்திற்கான பொருளாதாரத் தடை போராட்டம் நடத்தினர்.
இன்று காலை நெடுமாறன் தலைமையில் பெரியாறு அணை மீட்பு குழுவினரும் ஏராளமான விவசாயிகளும்கம்பத்தில் குவித்தனர். கேரளாவுக்கு செல்லும் உணவு தானியங்கள் உள்ளிட்ட சரக்குகளைஏற்றிச் செல்லும் வாகனங்களை தடுக்க அவர்கள் முனைந்தனர்.
தேனி மாவட்டம் கம்பம், கோவை மாவட்டம் காக்காச் சாவடி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஆகியஇடங்களில் இந்தப் போராட்டங்கள் நடந்தன.
கம்பத்தில் நடந்த போராட்டத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். அவரது தலைமையில் நடந்தபோராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவேண்டும் என கோரி கோஷமிட்டனர். அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல காக்காச் சாவடியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.செங்கோட்டையில் நடந்த போராட்டதித்தில் பங்கேற்ற 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இப்போராட்டம் காரணமாக திருவனந்தபுரத்திலிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தும் கேரளஎல்லைக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டன.
வைகோ கண்டனம்:
இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளுக்காகஅறப்போராட்டம் நடத்திய பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்குரியது என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தமிழகத்தின் ஜீவாதாரஉரிமைகளைப் பாதுகாப்பதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில்அறப்போராட்டம் நடத்தினர்.
கேரள முதல்வரும், அரசும், தமிழகத்தின் உரிமைகளை மறுத்து அக்கிரமமான முறையில் எதிர்ப்புக் காட்டிவருவதால், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பாசன வசதியைப் பறி கொடுத்து தமிழக மக்கள்பரிதவிக்கின்றனர்.
தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், மறியல் அறப் போராட்டத்தை பழ.நெடுமாறனும்,தமிழர் அமைப்புகளும், விவசாய சங்கங்களும் மேற்கொண்டு கேரளத்துக்குச் செல்லும் பொருட்களையும்,வாகனங்களையும் அடையாள நிமித்தமாகத் தடுக்க மறியல் போராட்டத்துக்கான அறிக்கையை நவம்பர் மாதத்தொடக்கத்திலேயே நெடுமாறன் வெளியிட்டிருக்கிறார்.
இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் கருணாநிதி நமது மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியகடமைகளைச் செய்யாமல், மூன்று மாத காலம் செயலற்று அலட்சியப்படுத்தி விட்டு திடீரென்று நவம்பர் 23ம்தேதி திமுகவினரை ஏவி, கேரளாவுக்குச் செல்கின்ற வாகனங்களைத் தடுத்து மறியலில் ஈடுபடச் செய்தார்.
இதில் திமுக மாவட்டசெயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் யாரும் கைதுசெய்ய்படவில்லை. ஆனால் பழ.நெடுமாறனையும், அறப் போராட்ட வீரர்களையும் திமுக அரசு கைது செய்துஇரட்டை நிலையை அம்பலப்படுத்தி விட்டது.
இந்த கைது நடவடிககைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
கேரளா போட்டி போராட்டம்:
இந் நிலையில் தமிழக விவசாயிகள் இன்று நடத்தும் கேரள பொருளாதார தடைபோராட்டத்திற்குப் போட்டியாக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்துகிராம மக்கள் பெரியாறு அணைக்குப் பின்னால் உள்ள பேபி அணையை உடைக்கும்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள அய்யப்பன்கோவில், மிளாமலை, வண்டிப்பெரியாறு,வல்லக்கடவு, உப்புத்துரை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பேபி அணையைஉடைத்து கால்வாய் வெட்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து ஐந்து கிராமங்களின் பிரதிநிதிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் ராஜன் சந்தித்துப் பேசினார். ஆனால் தங்களது முடிவில்கிராமத்தினர் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
பேபி அணைக்குச் செல்ல காட்டுப் பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும்.வனத்துறைக்கு சொந்தமான அந்தப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கைதுசெய்யப்படுவார்கள் என வனத்துறையும், காவல்துறையும் எச்சரித்துள்ளன.போராட்டத்தையொட்டி குமுளியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications