மலையுடன் வேண்டாம்-குட்டிகளுக்கு கருணாநிதி
சென்னை:திமுக மாபெரும் மலை. புதிதாக ஆரம்பிக்கும் கட்சிகள் இந்த மலையுடன் மோதவேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக, மதிமுக, தேமுதிகவைச் சேர்ந்த 5,000க்கும்மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.இதில் கருணாநிதி பேசுகையில்,
அறிவாலயம் திறக்கப்படும் நிகழ்ச்சியின்போது கூட இவ்வளவு கூட்டம் வந்ததில்லை.இப்போது மண்டபம் நிரம்பி வழிகிறது. இத்தனை பேரும் திமுகவின் சிப்பாய்கள்.
நாகை மாவட்டத்தில் திமுக வளர்ந்து வருவது என்பது சாதாரண விஷயமல்ல. அங்குதிமுகவை வளர்க்க என்ன பாடுபட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அதைஅனுபவப் பூர்வமாக உணர்ந்தவன் நான்.
இப்போது புதிது புதிதாக நிறைய கட்சிகள் தோன்றுகின்றன. தோன்றிய வேகத்தில்அழிந்தும் போகின்றன. அப்படித் தோன்றும் சில கட்சிகள் திமுகவை அழிக்கவேண்டும் என நினைத்து தாக்குகின்றன.
ஆனால் திமுக மாபெரும் மலை. மலையுடன் மோதுகிறோம் என்பதை அவர்கள்உணர வேண்டும். அதை மறந்து விடக் கூடாது.
இந்த மலை பெரியாரின் கொள்கைகளாலும், அண்ணாவின் அனுபவத்தாலும்உருவானது. இதை அவ்வளவு சீக்கிரம் யாராலும் அசைத்து விட முடியாது என்றார்கருணாநிதி.


Click it and Unblock the Notifications
