கேரள அரண்மனை மீட்பு போர்: 43 பேர் கைது
தக்கலை:கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரள அரசுக்குச் சொந்தமான பத்மநாபபுரம்அரண்மனையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ச் சான்றோர் பேரவையைசேர்ந்த 43 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க கேரள அரசு மறுத்துவருவதைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள கேரள அரசுக்குச் சொந்தமானசொத்துக்களை மீட்கும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்ச் சான்றோர் பேரவைஅறிவித்திருந்தது.
அதன்படி முதல் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரள அரசுக்குச்சொந்தமான பத்மநாபபுரம் அரண்மனையை மீட்கும் போராட்டத்தில் பேரவையின்தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் வியனரசு தலைமையில் போராட்டம் நிடந்தது.
தக்கலை தாசில்தார் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்துவது தொடர்பானஉச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
நெய்யாற்றின் இடது கரை கால்வாயில் கேரள அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும்.பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றிப் பார்க்க வசூலிக்கும் கட்டணத்தைஉயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும் என கோரி கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள் அரண்மனையை நோக்கி ஊர்வலமாக செல்ல முற்பட்டதால்போலீஸார் தடுத்து கைது செய்தனர். கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டஅனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications