நார்வே தூதுக் குழுவுக்கு இலங்கை திடீர் தடை
கொழும்பு:விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை சந்தித்துப் பேச நார்வே தூதுக் குழுவுக்குஇலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது. இதனால் அமைதி முயற்சிகளுக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இனிமேல் வர மாட்டோம், தமிழ் ஈழத்தை அடையும் முயற்சியைதீவிரப்படுத்தப் போவதாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், மாவீரர்நாள் உரையின்போது திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் இலங்கையில் போர்வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
இந் நிலையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் புலிகள் அமைப்பின்அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச் செல்வனை சந்தித்துபேசினர். அப்போது போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க புலிகள் தயாராக இருப்பதாகதெரிவித்தார்.
இதையடுத்து அரசுத் தரப்பிடம் புலிகளின் விருப்பத்தை போர் நிறுத்தக் குழுதெரிவித்தது. இந் நிலையில், அதிபர் ராஜபக்ஷேவின் தம்பி கொதபயாராஜபக்ஷேவைக் குறி வைத்து நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் அவர்காயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து நேற்று இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது. மேலும், நார்வே தூதுக் குழுத் தலைவர் ஜான்ஹான்சன் பாயர்,தலைமையிலான தூதுக் குழு 6ம் தேதி கிளிநொச்சிக்குச் செல்வதற்கு அனுமதிஅளிப்பதில்லை எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இலங்கை அரசின் இந்த திடீர் தடை முடிவு சமரச முயற்சிகளுக்குப் பெரும்பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், கடந்த 2002ம் ஆண்டு விலக்கப்பட்டவிடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மீண்டும் கொண்டு வர இலங்கை அரசுதிட்டமிட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக கடந்த 2002ம் ஆண்டு புலிகள் அமைப்பு மீதானதடை நீக்கப்பட்டது. ஆனால் மீண்டும் தடை விதிக்க வேண்டும் என ஜனதா விமுக்திபெரனா உள்ளிட்ட சில கட்சிகள் அரசை வலியுறுத்தி வருகின்றன.
மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டால், நார்வேகுழுவின் சமரச முயற்சிக்கும் தடை விதிக்கப்படும். இதற்கிடையே, விடுதலைப்புலிகளை சந்திக்க இலங்கை அரசு விதித்துள்ள தடை குறித்து நார்வே குழு எந்தக்கருத்தையும் வெளியிடவில்லை.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications