கருணாநிதி Vs
சென்னை:முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக தமிழக அரசின் சார்பில் முதல்வர்கருணாநிதியும், கேரள அரசின் சார்பில் முதல்வர் அச்சுதானந்தனும் இரு மாநிலபத்திரிகைகளிலும் கொடுத்துள்ள விளம்பரங்கள் பிரச்சினையில் புதிய திருப்பத்தைஏற்படுத்தியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் டெல்லியில் இருமாநில முதல்வர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் நடந்தது.அப்போது எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இரு மாநில அமைச்சர்களும் சந்தித்துப் பேசுவது என்று மட்டுமேமுடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி கூட்டத்தில் கருணாநிதி பேசிய உருக்கமான பேச்சை அப்படியே விளம்பரமாககேரளாவில் உள்ள முன்னணி நாளிதழ்களில் தமிழக அரசு விளம்பரமாக கொடுத்துள்ளது.
டெல்லியில் கருணாநிதி பேசுகையில், தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் தொன்று தொட்டு இருந்து வரும் உறவுகள்,தொடர்புகள், தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் இடையிலான இனத் தொடர்புகள், சேர, சோழ, பாண்டியர்காலம் தொட்டு நிலவி வரும் உறவுகளை விலாவாரியாக விளக்கிப் பேசியிருந்தார்.
இரு மாநிலத்திற்கும், இனத்திற்கும் இடையே இப்படி நிலவி வரும் உறவுகள், முல்லைப் பெரியாறுபிரச்சினையால் கெட்டுப் போக இரு மாநிலங்களும் அனுமதிக்கக் கூடாது என்று கருணாநிதி தனது பேச்சில்கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்தப் பேச்சை அப்படியே விளம்பரமாக முன்னணி மலையாள நாளிதழ்களிலும், தமிழகத்திலிருந்துவெளியாகும் முன்னணி தமிழ், ஆங்கில நாளிதழ்களிலும் தமிழக அரசு விளம்பரப்படுத்தியுள்ளது. இதைப்பார்த்த கேரள அரசும் பதிலடியாக சென்னையிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் விளம்பரம்செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்தால், ஐந்து மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கானமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கி டெல்லி கூட்டத்தில் முதல்வர் அச்சுதானந்தன் பேசிய பேச்சையேவிளம்பரமாக கொடுத்துள்ளது கேரள அரசு.
இரு மாநில அமைச்சர்களின் பேட்டிகள், அறிக்கைகள், உச்சகட்டமாக டெல்லி பேச்சுவார்த்தை என்பது போகஇப்போது பத்திரிகைகளில் விளம்பரம் மூலமாகவும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரு மாநில அரசுகளும்வாதத்தைத் தொடங்கியுள்ளது இப்பிரச்சினையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications