பனியில் நடுங்குது ஊட்டி-கடும் பனி
ஊட்டி:மலைகளின் ராணியான ஊட்டியில் உறைய வைக்கும் வகையில் பனிப் பொழிவு ஆரம்பித்துள்ளது. இதனால்ஊட்டி முழுவதும் கடும் குளிரில் நடுங்க ஆரம்பித்துள்ளது.
மழைக்காலம் முடிவடைய ஆரம்பித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனி கொட்டஆரம்பித்துள்ளது. மலைகளின் ராணி என வர்ணிக்கப்படும் ஊட்டியில், உறை பனி சீசன் ஆரம்பித்துள்ளது.
மாலையில் சூரியன் மறைய ஆரம்பித்தவுடன் பனிப்பொழிவு தொடங்கி விடுகிறது. விடிய விடிய பனிகொட்டுவதால், பச்சைப் பசேல் என காணப்பட்ட புல்வெளிகள் அனைத்தும் வெள்ளை நிறமாககாணப்படுகின்றன.
பனிப் பொழிவு தொடங்கியுள்ளதால் நகரமே கடும் குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளது. போகப் போக உறைபனிப்பொழிவு அதிகரிக்கும் என தெரிகிறது.
இதேபோல தலைநகர் சென்னை உள்பட மாநிலத்தின் இதர பகுதிகளிலும் இரவில் பனி கொட்டத்தொடங்கியுள்ளது. இதனால், இரவில் குளிர் அதிகரித்துள்ளது. ஸ்வெட்டர், மப்ளர் போன்ற குளிர் காக்கும்உடைகளின் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications