இலங்கைக்கு கெடு விதிக்க ராமதாஸ் கோரிக்கை
ராமநாதபுரம்:இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு 6 மாதத்தில் தீர்வு காண வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு இந்தியா கெடுவிதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின்பிரச்சினை குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும் பேசவேண்டும். இங்கு விவாதிக்காமல் அப்பிரச்சியைை வேறு எங்குமே விவாதிக்க முடியாது.
சமீபத்தில் கடலூருக்கு வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூட, அயர்லாந்து, போஸ்னியாபிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வு காணப்பட்டது போல இலங்கைப் பிரச்சினைக்கும் அமைதியான, சுமூக தீர்வுகாணப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதைத்தான் இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. பாமகவும், இதர கட்சிகளும் இதைத்தான் கோரிவருகின்றன. ஆனால் இலங்கை அரசோ, அமைதிப் பேச்சு என்று கூறிக் கொண்டே, அப்பாவித் தமிழர்களைகொன்று குவிப்பதில் ஈடுபட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை இப்படியே விட்டு விடாமல், இலங்கை அரசுக்கு காலக் கெடு விதிக்க வேண்டும். 6மாதத்திற்குள் அமைதித் தீர்வு காண வேண்டும் என இந்தியா கெடு விதிக்க வேண்டும்.
நார்வே போன்ற நாடுகள் அமைதி முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இருந்தாலும், இந்தியா தனது பொறுப்பிலிருந்துவிலகக் கூடாது, தட்டிக் கழிக்கக் கூடாது. பிரச்சனையின் அவசியத்தை மத்திய அரசுக்கு நாம்தான் உணர்த்தவேண்டும்.
சட்டசபையில் இதுதொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதற்குத் தயக்கமோ, சிக்கலோஇருந்தால் பாமக சார்பில் தனித் தீர்மானம் கொண்டு வர தயாராக உள்ளோம். அதை சபாநாயகர் அனுமதித்துஒரு மனதாக நிறைவேற்ற உதவிட வேண்டும்.
இந்தியா காலக்கெடு விதித்தும் இலங்கை அரசு தயங்கினால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசிக்கவேண்டும்.
இலங்கை கடற்படையுடன், இந்திய கடற்படை இணைந்து ரோந்து செல்ல வேண்டும் என்ற ராஜபக்ஷேவின்கோரிக்கையை ராமநாதபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் அலி வரவேற்றுள்ளார். அது கடுமையாககண்டனத்துக்குரியது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications