சித்து ராஜினாமாவை ஏற்றார் சபாநாயகர்
டெல்லி:கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான நவ்ஜோத்சிங் சித்து வழங்கிய ராஜினாமா கடித்ததை ஏற்றுள்ளதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
பாட்டியால் குர்னாம் சிங் என்பவரை அடித்துக் கொன்ற வழக்கில் சித்து குற்றவாளி என சமீபத்தில்பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து சித்து தனது எம்.பி. பதவியை ராஜினாமாசெய்து சோம்நாத் சாட்டர்ஜிக்குகடிதம் எழுதினார்.
ஆனால் கடிதம் விதிமுறைக்கு முரணாக இருப்பதாக கூறி அந்தக் கடிதத்தை ஏற்க சோம்நாத் சாட்டர்ஜி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து நான் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்ற வாசகங்கள் மட்டும்இடம்பெற்ற கடிதத்தை சாட்டர்ஜியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் சித்து.
இந்தக் கடிதம் டிசம்பர் 2ம் தேதி தனக்கு வந்ததாகவும், ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இன்றுலோக்சபாவில் சாட்டர்ஜி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications