டிச. 6- தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் நாளைஅனுஷ்டிக்கப்படுவதால், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்குஅதிகரிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதியன்று எந்தவித அசம்பாவிதச்சம்பங்களும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுப்பது வழக்கம்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள விமானநிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள்உள்ளிட்டவற்றில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் வைத்துபயணிகள் சோதனையிடப்படுகிறார்கள். பயணிகள் கொண்டு வரும் பெட்டிகள்,சூட்கேஸ்கள், பைகள் உள்ளிட்டவையும் தீவீரமாக சோதிக்கப்படுகின்றன.

ரயில் நிலையஙகளில் போலீஸார் விடிய விடிய ரோந்து சுற்றி வருகின்றனர்.இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களிலும் தீவிரக்கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள விடுதிகளில் தங்கியிருப்போரிடம் போலீஸார் தீவிர விசாரணைநிடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் திடீர் திடீரென ரெய்டு நடத்தி சோதனைபோடுகிறார்கள்.

பாதுகாப்பு கெடுபிடிகள் அமலில் இருப்பதால், ரயில் நிலையங்களுக்கு வரும்பயணிகள் சில மணி நேரம் முன்னதாகவே வந்து போலீஸாரின் சோதனைகளுக்குஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதே போல நாடு முழுவதுமே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+