காங். கூட்டணியில் மதிமுக நீடிக்கிறது: வைகோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி:பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டதால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிக்கிறோம் என மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சிஎன்பிசி தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் டெவில்ஸ் அட்வோகேட் நிகழ்ச்சியில் வைகோ அளித்த பேட்டி:

எங்களது எம்.பிக்களின் ஆதரவை மன்மோகன் சிங் அரசு கேட்கவில்லை. அதை நம்பியும் அவர்கள் இல்லை.அதேசமயம், கூட்டணியில் மதிமுக நீடிக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டதால் மதிமுக தொடர்ந்துஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிக்கிறது.

சுய மரியாதையுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சேரவும், ஆட்சிக்கு ஆதரவு தரவும் மதிமுக முடிவுசெய்தது. நாங்கள் மதிக்கப்படுவதால் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தீவிரவாத அமைப்பாககருதலாம். நான் ஏன் அப்படி நினைக்க வேண்டும்? ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தருவதற்காககம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது கொள்கைகளை விட்டு விட்டனவா.? வெளியிலிருந்து அவர்கள் ஆதரவுதருகிறார்கள். அதேபோல நாங்களும் வெளியிலிருந்து ஆதரவளிக்கிறோம்.

தமிழ் ஈழம் மட்டுமே இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பது எனது நீண்ட கால கருத்து. அதுதான்இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர விடிவை கொடுக்க முடியும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இப்பிரச்சினையில் தனித்தனி கருத்து உள்ளது. அதுபோலவே அதிமுகவுக்கும்,அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த தனிக் கருத்து உள்ளது.அதன் கருத்தை வெளிப்படுத்த அதிமுகவுக்கு தனி உரிமை உள்ளது. அதை வைத்து மதிமுகவுக்கும்,அதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு என கூற முடியாது.

இலங்கைத் தமிழர்கள் மீதான எனது கவலை குறித்து ஜெயலலிதா நன்கு உணர்ந்துள்ளார். எனவே எங்களுக்குள்இப்பிரச்சினையில் எந்த முரண்பாடும் இல்லை.

ராஜீவ் காந்தி தன்னை ஈழத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது மிகப்பெரிய உளறல். அப்படி ஒரு கோரிக்கையை ஒருபோதும் ராஜீவ் காந்தி விடுத்ததில்லை. அப்போது என்னநடந்தது என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே நான் பிரபாகரனை சந்திக்கப் போனதால்தான் பிரச்சினைக்குத்தீர்வு காண முடியாமல் போய் விட்டதாக கருணாநிதி கூறியது தமிழக மக்களை திசை திருப்பும் பேச்சாகும்என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+