கருணாநிதியுடன் விஜயகாந்த் சந்திப்பு
சென்னை:அமுதல்வர் கருணாநிதியை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி மனுக்கள் கொடுத்தார். இதேபோல அமைச்சர்களையும் அவர் சந்தித்து மனு கொடுத்தார்.
பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரையும், அமைச்சர்களையும் சந்தித்து மனு கொடுக்கவிருப்பதாகவிஜயகாந்த் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல்வர் மற்றும் பல்வேறு அமைச்சர்களைதலைமைச் செயலகத்தில் சந்தித்தார் விஜயகாந்த்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த பேசுகையில், எனது தொகுதி பிரச்சினைகள் தொடர்பாகமுதல்வரிடம் மனு கொடுத்தேன். அவற்றை நிறைவேற்ற ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
இதேபோல உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு,பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்ஆகியோரையும் சந்தித்து எனது தொகுதி குறைகள் தொடர்பாக மனு கொடுத்தேன்.
அனைவருமே எனது கோரிக்கைகள் குறித்து ஆவண செய்வதாக, நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். 3அமைச்சர்களை மட்டும் சந்திக்க முடியவில்லை.
ஆளும் கட்சியை விமர்சிப்பது என்பது வேறு. கோரிக்கைகள் வைப்பது என்பது வேறு. அந்தஅடிப்படையில்தான் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ளேன்.
தமிழகத்தில் நீர்ப் பங்கீட்டில் அண்டை மாநிலங்களோடு பிரச்சினை உள்ளது. அந்தத் துறைக்கு திமுக சார்பில் ஒருஅமைச்சரை கேட் வாங்கவில்லை என பொதுவாக புகார் உள்ளது. அப்படி கேட்டு வாங்காதது தவறுதான்.காரணம், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும் தண்ணீர்ப் பிரச்சினை இருந்தபோது கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர்மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார்.
இப்போது கர்நாடகத்திற்கும், மகாராஷ்டிராவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை உள்ளது. இப்போதுமகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவராஜ் பாட்டீல் உள்துறை அமைச்சராக உள்ளார்.
எனவே நீர்வளத்துறையை நாம் கேட்டு வாங்குவதில் தவறில்லை. அப்படி வாங்கியிருந்தால், கேரளா, கர்நாடகமாநிலங்கள் தண்ணீர்ப் பங்கீட்டில் எந்தப் பிரச்சினையும் செய்திருக்க முடியாது.
என்.எல்.சி. விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி செயல்பட்டது போல, இப்போது முல்லைப் பெரியாறு அணைவிவகாரத்திலும் செயல்பட்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் கிளைமாக்ஸ். கேரள அரசின் அறிவிப்பு மற்றொருகிளைமாக்ஸ். எனவே கிளைமாக்ஸ் வந்த பிறகு மீண்டும் படத்தைக் காட்டினால் மக்கள் யாரும் பார்க்கமாட்டார்கள் என்பது எனது வாதம்.
புதிய அணை கட்டலாம் என கேரள முதல்வர் கூறுகிறார். அப்படிக் கட்டினாலும் கூட எங்களால் முடிந்தஅளவுதான் கொடுப்போம் என முதல்வர் அச்சுதானந்தன் கூறுகிறார். எனவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைஅமல்படுத்துவதுதான் இதற்கு ஒரே தீர்வு.
திமுக மலை, மோத வேண்டாம் என கருணாநிதி கூறியிருப்பது நியாயம்தான். ஒரு காலத்தில் மலை போலஇருந்த காங்கிரஸிடம் மோதித்தான் திமுக பெரிய கட்சியாக உருவாகியது. பிறகு திமுகவிடம் மோதித்தான்அதிமுக வந்தது. எனவே பெரிய கட்சிகளுடன் மோதுவதில் எந்தத் தவறும் இல்லை.
காசுக்காக போராடுபவன் அரசியல்வாதி. மண்ணுக்காக போராடுபவன் போராளி. அவர்களது போராட்டம் காலதாமதம் ஆனாலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது வரலாறு. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் தீர்வுகிடைக்கும்.
எனது கல்யாண மண்டபம் எந்த அளவுக்கு இடிபடும் என்று முறையாக கேட்டும் இதுவரை டி.ஆர்.பாலு பதில்சொல்லவில்லை. இடிபடப் போகிறது என்று முன்பே எனக்குத் தெரிவித்ததாக பாலு சொல்வது பொய். நான் கட்சிதொடங்கும் முன்பே கூறியிருந்தால் நான் கலைஞரையே பார்த்திருப்பேன்.
நான் எப்போதும் என்னை முதல் அணியாகவே நினைத்துக் கொள்கிறேன். யாரையும் அழைத்து 3வது அணிஅமைக்க நான் முயற்சிக்கவில்லை. அவர்களாக வந்தால் சேர்த்துக் கொள்வேன்.
யார் எனது கட்சிக்கு வந்து சேர்ந்தாலும் எனது தன்மையிலிருந்து மாற மாட்டேன். ஊழல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் திருந்த மாட்டார்களா.? என்னைத் தேடி வருபவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் தவறுஇல்லை.
ஜெயலலிதா என்னைக் குறை சொல்லி பேசியதை நான் மறந்து விட்டேன். மக்களும் மறந்து விட்டார்கள்.மறப்போம், மன்னிப்போம்.
தமிழகத்தில் ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளனர். எனவே நாங்களும் ஒரு நாள்ஆட்சியைப் பிடிப்போம் என்றார் விஜயகாந்த்.
கேப்டனின் நேரடி கட்டுப்பாட்டில்...
இதற்கிடையில் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய ஐந்து மாநகர தேமுதிக நிர்வாகங்களும்இனிமேல் கட்சித் தலைமையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகர் மாவட்ட கழங்களும் நேரடியாக தலைமைக்கழகத்தின் கீழ்கட்டுப்பட்ட மாநகர் மாவட்ட கழக அமைப்பாக செயல்பட வேண்டும்.
மாநகர கழக நிர்வாகிகளாகவும், சார்பு அமைப்புகளான அனைத்து பிரிவு அணிகளின் நிர்வாகிகளாகவும்இருக்கின்ற அனைவரும், இனி மேல் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகளாகவும், மாநகர் மாவட்ட அணிநிர்வாகிகளாகவும், அவரவர் வகிக்கின்ற பதவியில் அப்படியே தொடர்ந்து கழக பணியாற்றுவார்கள்.
இதுவரை மாநகர கழக நிர்வாகி என அழைக்கப்பட்வர்கள் இனி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் எனஅழைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications