சில்மிஷ பாதிரியார் எஸ்கேப்-போராட்டம்
சென்னை:சிறுமிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதராக சர்ச்சையில் சிக்கியுள்ள பாதிரியார் தலைமறைவாகி விட்டார்.அவரைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள், பெண்கள்காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் போபர்ஸ் ஜெயராஜ். 60 வயதாகும் இவர் ஒரு பாதிரியார்.அப்பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எனது மகள் உள்பட பல சிறுமிகளை தனது வீட்டுக்குள்அழைத்துச் சென்று தனது காம வெறியைக் காட்டியதாக ஜெயராஜ் மீது மாநகர காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் சகாயமேரி என்பவர் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை உதவி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீஸார்விசாரணை நடத்துவதற்காக பாதிரியார் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அவர் வீட்டைப் பூட்டி விட்டுகுடும்பத்துடன் அவர் ஓடி விட்டார்.
அவரை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பரங்கிமலை போலீஸ்நிலையம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், கடந்த 10வருடங்களாக ஜெயராஜ் இங்கு வசித்து வருகிறார். அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது. ஆனால் மனைவியைவிட்டு விட்டு கிரேஸி என்ற பெண்ணை 2வதாக கல்யாணம் செய்து கொண்டு இங்கு குடும்பம் நடத்தி வந்தார்.
பேய்களை விரட்ட, தேர்வில் வெற்றி பெற, நோய்களைக் குணப்படுத்துவதாக கூறி அவர் ஜெபம் செய்வதாககூறுவார். ஆனால் அதை வைத்துக் கொண்டு அவர் செக்ஸ் திருவிளையாடலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பேத்தி வயதே உடைய பல சிறுமிகளை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று செக்ஸ் சில்மிஷங்கள்செய்துள்ளார். இதை வெளியே சொல்லக் கூடாது என்று எச்சரித்து அவர்ககளுக்கு 5 ரூபாய் கொடுத்து அனுப்பிவிடுவார்.
இதையும் மீறி வீட்டில் சொல்லப் போவதாக கூறும் சிறுமிகளிடம் அப்படிச் சொன்னால் நீ நரகத்திற்குத்தான்போவாய் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன குழந்தைகள் சொல்லாமல் விட்டு விட்டனர்.
தனது மகளை பலவந்தப்படுத்தியது குறித்து சகாயமேரி போய்க் கேட்டபோது, உன்னால் ஒன்றும் செய்யமுடியாது. மீறி ஏதாவது பிரச்சினை செய்தால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
ஆனால் சகாயமேரி பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே போலீஸார் விசாரணைக்காகஅழைத்துச் சென்றனர். ஆனால் அடுத்த நாளே அவர் வெளியே வந்து விட்டார். இதையடுத்தே அவரேஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இப்போது தலைமறைவாகி விட்டதாக கூறுகிறார்கள்.
ஜெயராஜ் போன்ற காமக் கொடூரர்களை சும்மா விடக் கூடாது. அவரைப் பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications