3 வயது குழந்தைக்கு சூடு போட்ட ஆயா
கோவை:கோவையில் பால்வாடியில் விடப்பட்டிருந்த 3 வயதுக் குழந்தையின் முகத்தில் ஆயாசூடு போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காமராஜ் நகர் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை பார்த்துவரும் கண்ணன், ஜோதிமணி தம்பதி தங்களது 3 வயது மகள் கீர்த்திப் பிரியாவைசுந்தராபுரம் பகுதியில் உள்ள பால்வாடியில் விட்டு விட்டு வேலைக்குச் செல்வதுவழக்கம்.
நவம்பர் 29ம் தேதி மாலை பால்வாடியிலிருந்து குழந்தையை அழைத்துக் கொண்டுவீட்டுக்குத் திரும்பிய கண்ணன் தம்பதியினர், கீர்த்திப்பிரியாவின் இடது தாடைப்பகுதியில் காயம் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர்.
இதுகுறித்து கீர்த்திப்பிரியாவிடம் அவர்கள் கேட்டபோது, ஆயா சூடு போட்டுவிட்டதாக அவள் அழுதுகொண்டே கூறினாள். திடுக்கிட்டுப் போன கண்ணன் தம்பதிஅடுத்த நாளை காலை பால்வாடிக்குச் சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர்.
ஆனால் பால்வாடியில் இருந்த ஊழியர்கள் சரியாக விளக்கம் தரவில்லையாம். சூடுபோடவே இல்லை என்றும் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மக்கள் சக்தி சங்கம்என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை கண்ணன், ஜோதிமணி அணுகியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த அமைப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மிட்டலைசந்தித்து புகார் கொடுத்தது.
காயம்பட்ட குழந்தைக்கு கோவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டது. 3 வயது குழந்தைக்கு ஆயா சூடு போட்ட விவகாரம் கோவையில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications