போலி கார்டுகள் மூலம் ஏடிஎம்மில் பணம் திருட்டு
சென்னை:போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணத்தைத் திருடிய இலங்கையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு ஒருவர் வந்தார்.அவரிடம் வெள்ளை நிறத்தில் பல டெபிட் கார்டுகள் இருந்தன. ஒரு கார்டைப் போட்டு ரூ. 15,000 பணம்எடுத்தார். தொடர்ந்து ஒவ்வொரு கார்டாக போட்டு அவர் பணம் எடுக்க முயன்றார்.
இதை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த காவலாளிக்கு சந்தேகம் வந்தது. உடனடியாக உள்ளே போய்அந்த நபரிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் திக்கித் திணறி முரண்பாடாக பேசியுள்ளார்.
இதையடுத்து காவலாளி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார் அந்த நபரிடம்விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வைத்திருந்தது போலி கார்டுகள் எனத் தெரிய வந்தது.
அந்த நபரின் பெயர் ராமகிருஷ்ணன். இலங்கையைச் சேர்ந்தவர். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள்லண்டனில் வசிக்கிறார்கள். வேளச்சேரியில் வீடு வாங்கி அதை வாடகைக்கு விட்டுள்ளார் ராமகிருஷ்ணன்.
லண்டனில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் தொழிலதிபர்களின் டெபிட் மற்றும் கிரெட் கார்டுகளின்எண்களை சில நபர்கள் மூலம் ராமகிருஷ்ணன் சேகரித்துள்ளார். பின்னர் அந்த எண்ணைக் கொண்டு போலியாககார்டுகளைத் தயாரித்துள்ளார்.
இதுபோன்ற போலி கார்டுகளை டெல்லி அல்லது மும்பையில் தயாரித்துக் கொடுக்கிறார்கள் என்று போலீசாரிடம்தெரிவித்துள்ளார் ராமகிருஷ்ணன்.
ராமகிருஷ்ணனனோடு சேர்த்து மொத்தம் 4 பேர் இந்த போலி கார்டுகளுடன் சென்னைக்கு வந்துள்ளனர்.நட்சத்திரஹோட்டலில் தங்கி பணம் எடுத்துள்ளனர்.
ராமகிருஷ்ணன் மாட்டியதை அறிந்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications