பிஜியில் ராணுவ புரட்சி: வீட்டு காவலில் பிரதமர்
சுவா:இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் பிஜி தீவில் இன்று ராணுவப் புரட்சி நடந்தது. பிரதமர் லைசானியாகுரோசே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது.
இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் பசிபிக் கடலில் உள்ள குட்டித் தீவுதான் பிஜி. ஆஸ்திரேலியா,நியூசிலாந்து நாடுகளுக்கு மிகவும் அருகாமையில் உள்ளது இந்தக் குட்டித் தீவு.
கடந்த 2000மாவது ஆண்டில் இங்கு நடந்த ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தபிரதமர் மகேந்திர செளத்ரி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.
இந்த நிலையில் புரட்சியில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு அளிப்பது தொடர்பாக சமீபத்தில்பிரதமர் குரேசேவுக்கும், ராணுவத் தலைமைத் தளபதி பிராங்க பைனிமாராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டது.
2000ம் ஆண்டில் புரட்சி நடத்தி ஆட்சியை கவிழ்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரமதருக்குபைனிமாரா கெடு விதித்தார். அதை பிரதமர் ஏற்கவில்லை. இதையடுத்து தற்போது ரத்தம் சிந்தாத புரட்சி மூலம்குரேசே ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது ராணுவம்.
பிரதமர் குரோசே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தை அதிபர் இலாய்லோ கலைத்துவிட்டார். அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் ராணுவத்தின் வசம் வந்துள்ளன.
அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அரசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த புரட்சியைநியூசிலாந்து நாட்டு வானொலி உறுதி செய்துள்ளது. பிரதமரை ஆட்சியிலிருந்து அகற்றவே புரட்சி நடந்துள்ளதாகஅது தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வீட்டுக் காவலில் உள்ள குரோசே பிபிசி தொலைக்காட்சிக்குஅளித்த பேட்டியில், தன்னை ராணுவம் கைது செய்யத் திட்டமிட்டுள்ளது. நான் பதவியை ராஜினாமாசெய்யவில்லை, செய்யவும் மாட்டேன் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.இலாய்லோ தனது அரசியல் சட்ட அதிகார வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். இது ஜனநாயக விரோதநடவடிக்கை என்று அவர்கூறியுள்ளார்.
ராணுவப் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து தலைநகர் சுவாவில் நிலைமை பதட்டமாக உள்ளது. இந்தியவம்சவாளியினர் மத்தியில்தான் பெரும் அச்சம் நிலவுகிறது. ராணுவத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளைவிதித்துள்ளனர். முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
