ஐடி மார்க்கெட் 200 பில்லியனை தொடும்-கலாம்
கொல்கத்தா:2010ம் ஆண்டுக்குள் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் சந்தை நிலவரம் 200 பில்லியன் டாலராக உயரும்என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
நாஸ்காம் மற்றும் ஏபிபி குழுமம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இன்போகாம் 2006 என்ற நிகழ்ச்சிகொல்கத்தாவில் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப்பேசினார்.
கலாம் பேசுகையில், தகவல் தொழில்நுட்ப சேவையில், உற்பத்தியை வருகிற 2010ம் ஆண்டுக்குள் 200 பில்லியன்டாலராக உயர்த்த நாஸ்காம், தகவல் தொழில்நுட்பத் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.
குறைந்த செலவு, தரமான உற்பத்தி, குறித்த காலத்தில் அவை வாடிக்கையாளரை அடைதல் ஆகிய மூன்றையும்தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டால் இந்த துறையில் நிலவும் போட்டியை சமாளித்து இலக்கை அடைவதுஎளிதாகும்.
அதேபோல ஒரு நாட்டின் வளர்ச்சியும், அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதில்தான் உள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த இலக்கை அடைய அரசுத் தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின் ஆளுமை திட்டம் 2007ம் ஆண்டுக்குள் முடிவடையவுள்ளது. நாட்டில் உள்ள13,000 மாவட்டங்கள் கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. அனைத்து கிராமங்களிலும் உள்ள அறிவுசார்மையங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொலை மருத்துவம் பிரபலமாகி வருகிறது. தொலை தூர பகுதிகளிலும் கல்வி சென்றடையும் வகையில் எடுசாக்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊரக மக்கள் தொகையை இந்த நடவடிக்கைகள் எட்டினால்தான்முழுமையான வெற்றியை நாம் அடைய முடியும்.
சாப்ட்வேர் துறை தொடர்ந்து வளர்ச்சி முகத்தில் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.சாப்ட்வேர், நெட்வொர்க்கிங் சாப்ட்வேர், இன்போடெக், பயோடெக், நானோ டெக்னாலஜி சாப்ட்வேர்களில்அதிக அளவில் ஆய்வு மற்றும் வளர்சிப் பிரிவுகளை தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் தொடங்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப சமுதாயம் என்பதிலிருந்து அறிவு சார் சமூகமாக இந்தியா உயர வேண்டும். நானோடெக்னாலஜி நமது கதவத்ை தட்டிக் கொண்டுள்ளது. இதை உரிய முறையில் பயன்படுத்த, நடைமுறைப்படுத்த,மேம்படுத்த கல்வியாளர்கள், பன்னாட்டு நிறுவனங்களுடன் நமது தொழில்துறை இணைந்து செயல்படவேண்டும்.
பிபிஓ நிறுவனங்களை 2வது மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.கொரியா,பிலிப்பைன்ஸ் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.மின் ஆளுகையை ஊக்கப்படுத்த வேண்டும். தொலை மருத்துவம் மற்றும் மின் வர்த்தகத்தை அதிகரிக்கவேண்டும். சிறு அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அதிக ஊக்கம் தர வேண்டும்.
இவற்றை செய்தால், தகவல் தொழில்நுட்ப சமுதாயம் என்ற அளவிலிருந்து அறிவு சார் சமுதாயமாக இந்தியாமாற முடியும். சுற்றுலா, வங்கிகள், இன்சூரன்ஸ், சுகாதாரம் மற்றும் பிற துறைகளை மேம்படுத்தவும் தகவல்தொழில்நுட்பத் துறை கை கொடுக்க வேண்டும்.
இந்தியாவில் 54 கோடி இளைஞர்கள் உள்ளனர். இவர்களின் திறமையை உரிய முறையில் கண்டறிந்துஅவற்றைப் பயன்படுத்திக் கொள்ள தகவல் தொழில்நுட்பத் துறை முன்வர வேண்டும் என்றார் கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications