தமிழகத்தில் ரூ.280 கோடி டெல் தொழிற்சாலை
சென்னை:சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் உயர் தொழில்நுட்ப பூங்காவில் கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனத்தை டெல்நிறுவனம் அமைக்கவுள்ளது.
உலகில் கம்ப்யூட்டர் உற்பத்தியில் பிரபலமான டெல் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரு. 280கோடி ரூபாய் முதலீட்டில் தனது தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இதற்கான தொடக்க விழாவில் கலந்துகொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது,
தமிழகத்தில் புதிய அரசு வந்து 6 மாதங்களே ஆன நிலையில், மாநில அரசு 6 பெரிய வெளிநாட்டுநிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் ரு. 2,700 கோடி முதலீட்டைதமிழகம் பெற்றுள்ளது.
தொழில் துறையிலும், பணித்துறையிலும் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு, ஒற்றைச் சாளர முறையில் தீர்வுகாணுதல், இலகுவான அணுகுமுறை போன்ற சாதகமான கொள்கைகளால் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் நேரடி முதலீட்டை தமிழகத்தில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
ஒற்றைச் சாளர முறையில், முதலீட்டாளர் ஒரேயொரு விண்ணப்ப மனுவை தாக்கல் செய்தாலே போதும். அந்தமனுவில் உள்ள விளக்கங்களின் அடிப்படையில், சட்டரீதியாக மற்றும் அனைத்து விதமான அமைப்புகளின்ஒப்புதல்களும் அளிக்கப்பட்டுவிடும்.
சமீப காலங்களில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகம் மின்னணு மண்டலமாகஅதிவேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் சிறப்பான உற்பத்தி மையமாக அனைவரும்ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்த இடம் மாறியுள்ளது.
உற்பத்தித் துறையில் தொழிற்சாலைகளுக்கு இடையே போட்டி போட்டுக் கொண்டு, மேலும் மேலும் முன்னேறவேண்டும் என்பதில் இந்த அரசு கவனமாக உள்ளது. அதற்கான உலகத் தரத்துடன் கூடிய உள்கட்டமைப்பைமாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்தும்.
டெல் நிறுவனம் ரூ. 280 கோடி முதலீட்டில் புதிய வசதிகளை ஏற்படுத்த உள்ளது. டெல் நிறுவனத்திற்குபொருட்களை வழங்கும் முக்கிய நிறுவனங்களும் ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில்தொழிற்சாலைகளை ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல் நிறுவனத்தின் மூலம் 1,100 பேருக்குநேரடி வேலை வாய்ப்பும், மறைமுகமாக 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
டெல் நிறுவனத்தில் பணிபுரிவோர் பெரும்பாலோர் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்று அந்தநிறுவனத்தினர் உறுதி அளித்துள்ளனர். அதற்காக நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்த நிறுவனத்தின்வளர்ச்சியை நான் கண்ணும் கருத்துமாக கவனித்து வருவேன் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications