சித்துவுக்கு 3 ஆண்டு சிறை-ரூ. 1லட்சம் அபராதம்
சண்டிகர்:கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், கடந்த 1988ம் ஆண்டு, காரை நிறுத்தும் தகராறில் குர்னாம் சிங் என்பவரைசித்துவும் அவரது நண்பர்களும் சேர்ந்து அடித்து உதைத்தனர். இதில் குர்னாம் சிங் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சித்து உள்ளிட்டோர் மீது பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்,சித்துவை விடுதலை செய்து பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப் மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதில் சித்துகுற்றவாளி என உயர்நீதிம்ன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. இதையடுத்து பாஜக எம்.பியான சித்து தனது பதவியைராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் சித்துவுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி இன்று அறிவித்தார். அதன்படி சித்துவுக்கு 3 ஆண்டுசிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை தீர்ப்பு நிறுத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இதனால் சித்து கைது செய்யப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications