ஜன. 1 முதல் வாட் அமல்: சட்டம் நிறைவேறியது
சென்னை:தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் மதிப்புக் கூட்டிய வரி (வாட்) விதிப்பு முறை அமலுக்கு வருகிறது.இதுதொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
தமிழகம், புதுவை உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாட் வரிவிதிப்பு முறை அமலாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் வாட் வரியை அமல்படுத்த திமுக அரசுமுடிவு செய்தது.
இதுதொடர்பான சட்ட மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் நேற்று சட்டசபையில் தாக்கல்செய்தார். பின்னர் இதன் மீது விவாதம் நடந்தது. காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் வாட் வரிவிதிப்பைவரவேற்றுப் பேசின. பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், இதை நடைமுறைப்படுத்தும்போது மிகவும்எச்சரிக்கையாக இருக்க வேண்டும், சிறு வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது என கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் வாட் வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாகமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில் குறுக்கிட்ட அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கடந்த அதிமுகஆட்சியின்போது நிதியமைச்சராக இருந்த பொன்னையன் வாட் வரி விதிப்பால் என்னென்ன நண்மைகள்ஏற்படும் என்பதை பட்டியலிட்டுச் சொன்னதை சுட்டிக் காட்டினார்.
இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆற்காடு வீராசாமியின் பேச்சுக்கு பதில் அளிக்கசி.வி.சண்முகம் முயன்றார். ஆனால் சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார். இதைக் கண்டித்து அதிமுகஉறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக மதிமுகவும் வெளிநடப்புச் செய்தது.
பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 1ம் தேதிமுதல் தமிழகத்தில் வாட் வரி விதிப்பு முறை அமலுக்கு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications