ஐ.டி. துறையில் ரூ. 80,000 கோடி முதலீடு
சென்னை:பல்வேறு முன்னணி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஒன்றரைஆண்டுகளில் ரூ. 80,000 கோடி அளவுக்கு முதலீடுகளை செய்துள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறைஅமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சென்னை அருகே பூந்தமல்லியில் டெல் நிறுவனத்தின் தொடக்க விழாவில் தயாநிதி மாறன் பேசுகையில்,இந்தியா, தற்போது தகவல் தொழில் நுட்பத்துறை முதலீடுகளின் மையமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 22,500 கோடி அன்னிய வெளிநாட்டு நேரடி முதலீடு கிடைந்துள்ளது. அது தவிர இந்தியநிறுவனங்களில் ரூ.9,000 கோடியை வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
2005-2006ம் ஆண்டில், தகவல் தொழில்நுட்ப துணைத் தொழில் துறையின் மூலம் ரூ. 28,350 கோடி ஏற்றுமதிவருமானம் கிடைத்துள்ளது. இது 2001-2002ம் ஆண்டை விட 4 மடங்கு அதிகம்.
பிபிஓ துறையின் மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் எனதுஅமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட 10 அம்ச கொள்கைத் திட்டத்தின் முக்கிய நோக்கம், உலக அளவில்போட்டித்திறன் மிக்க ஹார்டுவேர் தயாரிப்புத்துறையை இந்தியாவில் உருவாக்குவதும் அதன் மூலம் அந்நியநேரடி முதலீடுகளை ஈர்ப்பதும் அதன் முக்கிய நோக்கம்.
இன்டெல், சிஸ்கோ, மைக்ரோசாப்ட், மோட்டரோலா, எரிக்சன், நோகியா, கியோசிரா, சீமன்ஸ், எல்ஜி, சாம்சாங்மற்றும் இதர நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை உருவாக்க வந்தவண்ணம் உள்ளன. கடந்தஒன்றறை ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ. 80,000 கோடி முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளன.
தகவல் தொழில் நுட்பத்துறைக்கு முற்றிலும் வரிவிலக்கு பெற நிதி அமைச்சகத்தின் உதவிக்கு முயற்சிகள்மேற்கொண்டு வருகிறேன். 2009 மார்ச் மாதத்திற்குப் பிறகு தகவல் தொழில் நுட்ப துணைத் துறைகளுக்கும்முற்றிலும் வரிவிலக்கு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications