மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி

Subscribe to Oneindia Tamil

விருத்தாசலம்:ஜவுளிக்கடையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பள்ளி மாணவிகளை ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்தமுயன்ற சம்பவம் விருத்தாலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலத்தை சேர்ந்த கலாவதி, வயலூரை சேர்ந்த ராணி, முத்து கலா (மாணவிகளின் பெயர்மாற்றப்பட்டுள்ளது) 3 பேரும் விருத்தாசலத்தில், மங்கலம்பேட்டையிலும் 10 வகுப்பு படித்து வருகிறார்கள்.

இவர்களது ஊரைச் சேர்ந்த சரவணன் சென்னையில் வேலை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் ஊருக்குவந்தபோது, இந்த மாணவிகளை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, மூன்று மாணவிகளும் தங்களைபெற்றோர்கள் கண்டிப்பதை சரவணனிடம் கூறியுள்ளனர். அப்போது சரவணன் உங்களுக்கு பிரச்சனைஏற்பட்டால் சென்னை வாருங்கள் தான் அங்கு பெரிய ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருகிறேன் என்றுகூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி மாணவிகள் 3 பேரும் வீட்டில் சண்டை போட்டு கொண்டு சென்னை சென்றனர்.அங்கு சரவணனை சந்தித்து வேலை வாங்கி தருமாறு கூறினர். 3 பேரையும் சரவணன் தனக்கு தெரிந்த ஒருபெண்ணின் வீட்டில் தாங்க வைத்தார்.

அங்கு 3 நாட்கள் தங்கியும் வேலை வாங்கி தரவில்லை. இதனால் மாணவிகள் சரவணனிடம் எங்களுக்கு வேலைவாங்கி கொடுங்கள், இல்லை என்றால் எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் அவர்களை சமாதானப்படுத்தவற்காக சினிமாவுக்கு அழைத்து செல்லவதாக கூறி, பாண்டி பஜாரில்உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்து சென்று 2 அறை எடுத்து தங்க வைத்தார். இதனால் சந்தேகம் அடைந்தமாணவிகள் கேட்டதற்கு, நேரமாகி விட்டது. சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அப்போது சரவணனின் நண்பர்கள் ரமேஷ், சதீஷ், மற்றொரு சரவணன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.அப்போது சரவணன் அவர்களை அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு வெளியே சென்று விட்டான். அப்போதுஅவர்கள் மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்யவே மாணவிகள் சத்தம் போட்டுள்ளடனர். இதனால்பயந்து போன அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

மறுநாள் இரவு சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் பக்கத்து அறையில் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த 2பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு 3 மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்து முயன்றுள்ளனர். அதற்குமாணவிகள் ஒத்துழைக்காமல் சத்தம் போட்டுள்ளனர். இதனால் ஆந்திராவை சேர்ந்தவர்கள் பிரச்சனை வரும் எனகூறி திரும்பி சென்று விட்டனர்.

இந்நிலையில் 3 பேரில் ஒரு மாணவி லாட்ஜில் இருந்து தப்பி அருகில் இருந்த எஸ்டிடி பூத்தில் சென்னையில்வேலை பார்க்கும் வயலூரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மணிகண்டன் வயலூரில் உள்ள 3 மாணவிகளின் பெற்றோருக்கும் தகவல் தந்தார். அவர்கள்சென்னைக்கு விரைந்து வந்து லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவிகளை மீட்டு விருத்தாசலத்திற்குஅழைத்து சென்றனர்.

இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் தீவிர விசாரணைநடத்தினர். அதில் சரவணன் சென்னையில் ஒரு வேலையும் செய்யவில்லை என்பதும், அப்பாவிப் பெண்களைஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளதும் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+