இந்தியாவின் முதல் விபச்சார அழகனுக்கு சிறை
சென்னை:இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னையைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு,விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக ஒரு வாரம் சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும்விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களைத்தான் கைது செய்து, நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஆண்களையும்கைது செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதில்லை.
ஆனால் இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு ஆண் விபச்சாரத் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட நபரின் பெயர் கார்த்திகேயன். அம்பத்தூரைச் சேர்ந்த இவர் பி.இ.பட்டதாரி ஆவார்.
இணைய தளம் மூலம் விபச்சாரத் தொழிலை அவர் நடத்தி வந்தார். அதாவது தனதுபுகைப்படத்தை அதில் பிரசுரித்து, என்னிடம் இன்பம் அனுபவிக்கிற பெண்கள்அணுகலாம் என அதில் விளம்பரப்படுத்தியிருந்தார். இதைப் பார்த்து பல பணக்காரவீட்டுப் பெண்கள் கார்த்திகேயனை ரகசியமாக வரவழைத்து ஜாலியாக இருந்துகார்த்திகேயனுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள்.
இதுகுறித்து விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்துகார்த்திகேயனைப் பிடிக்க வலை வீசப்பட்டது. இ-மெயில் மூலம் போலீஸாரேகார்த்திகேயனைத் தொடர்பு கொண்டு இரு முகவரியைக் கொடுத்து அங்கு வரக்கூறினர்.
இதையடுத்து கடந்த அக்டோபர் 30ம் தேதி அந்த முகவரிக்கு கார்த்திகேயன் வந்தார்.அங்கு காத்திருந்த போலீஸார் கார்த்திகேயனைக் கைது செய்தனர். விபச்சாரத் தடுப்புச்சட்டம் பிரிவு 8பி மற்றும் 506 (2) பிரிவுகளின் கீழ் கார்த்திகேயன் மீதுசைதாப்பேட்டை 4வது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம்ஸ், கார்த்திகேயனுக்கு ஒரு வார சிறைத்தண்டனை மற்றும் ரூ. 500 அபராதம விதித்து தீர்ப்பளித்தார். மேலும்கார்த்திகேயனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக், செல்போன், ரூ. 150 பணம்ஆகியவற்றை அரசுச் சொத்தில் சேர்க்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின்போது கார்த்திகேயன் சிறையில் ஒரு வாரத்தை கழித்துவிட்டதால், அதையே தண்டனைக் காலமாக கருத்தில் கொள்ளலாம் எனவும் நீதிபதிஅறிவித்தார். இதனால் கார்த்திகேயன் அபராதத்தை மட்டும் கட்டி விட்டு விடுதலைஆனார்.


Click it and Unblock the Notifications
