ஒரே ஒரு பயணியுடன் சென்ற சிறப்பு ரயில்!!!
சென்னை :சென்னையிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஒரே ஒரு பயணிமட்டும் முன் பதிவு செய்து பயணித்தது ரயில்வே துறையில் பெரும் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.
விழாக் காலங்களிலும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களிலும் குறிப்பிட்டஊர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது ரயில்வே துறையின் வாடிக்கை. சிறப்புரயில்கள் இயக்குவது குறித்து முன்கூட்டியே பத்திரிக்கைகள், டிவி செய்திகள் மூலமாகதெரிவிப்பதும் வழக்கம்.
ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக விடப்பட்ட சிறப்பு ரயில் ஒன்றில், ஒரே ஒருபயணி மட்டும் முன் பதிவு செய்து பயணித்த வினோதம் நடந்துள்ளது.சென்னையிலிருந்து வாரணாசிக்கு 2 நாட்களுக்கு முன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மாலையில் கிளம்பிய சிறப்பு ரயில் குறித்தஅறிவிப்பை அன்று காலையில்தான் வெளியிட்டனர். இதனால் யாருக்கும் சிறப்புரயில் குறித்த தகவலே தெரியாமல் போனது. ஆனால் ஒரே ஒரு பயணி மட்டும் இதை(எப்படியோ) அறிந்து முன் பதிவு செய்தார்.
மாலை ரயில் கிளம்பியபோது அந்த பயணி மட்டும் ரயிலில் ஏறிப் பயணம் செய்தார்.ரயில் கிளம்பிச் சென்றவுடன்தான் அந்த ரயிலில் ஒரே ஒரு நபர் மட்டும் பயணம்செய்வது தெரிய வந்தது. இதை அறிந்த அந்த பயணியும் வியப்படைந்தார்.
ஏறும்போதே நினைத்தேன், பிளாட்பாரத்தில் யாரையும் காணவில்லையே என்று அந்தபயணி ரயில்வே ஊழியர்களிடம் ஆச்சரியப்பட்டுக் கூறியுள்ளார். ரயிலில் இருந்த 880இருக்கைகளும் காலியாகக் கிடக்க அந்த ஒத்த பயணி ரயில் முழுக்க சுற்றிச் சுற்றிச்சென்று தனது தனிப் பயணத்தை அனுபவித்துள்ளார்.
ஆந்திராவில் சில நிலையங்களில் மட்டும் சில பயணிகள் ஏறியுள்ளனர். ஆனால்அவர்களும் வாரணாசி போவதற்காக ஏறவில்லை. ஆந்திராவுக்குள்ளேயே அவர்கள்இறங்கி விட்டனராம்.
வாரணாசி வரை பயணித்த ஒரே பயணி சென்னையில் ஏறிய அந்த தனிப்பயணிதான்.
இந்த சோலோ ஓட்டத்தால் ரயில்வே துறைக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.இருந்தாலும் ரயிலை ரத்து செய்ய முடியாது என்பதால் ஒரு பயணியுடனேயே பலமாநிலங்களைக் கடந்து வாரணாசியை அடைந்துள்ளது அந்த சிறப்பு ரயில்.
சிறப்பு ரயில் முன்பதிவு குறித்து முன் கூட்டியே, முன் யோசனையுடன் ரயில்வே துறைசெயல்பட்டிருந்தால் இந்த வெட்டி செலவு மிஞ்சியிருக்கும்!.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications