அதிமுகவில் சேர மாட்டேன்: திருநாவுக்கரசர்
மதுரை:மீண்டும் அதிமுகவில் சேர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதிமுகவில் சேர மாட்டேன் என அகிலஇந்திய பாஜக பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள முதல்வர் அச்சுதானந்தனின் போக்கைக் கண்டித்து மதுரைஅண்ணா நகரில், பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக வந்த திருநாவுக்கரசர்செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரியார் சிலை சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது.
இதில் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும், முதல்வருக்கு நெருக்கமான சிலரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.திமுக அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு அவர்கள் செயல்பட்டுள்ளனர்.
பெரியார் சிலை சம்பவத்தைத் தொடர்ந்து அயோத்தியா மண்டபத்தில் தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இதேபோலஈரோடு, சங்கராபுரம் ஆகிய இடங்களிலும் கோவில்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இவை அனைத்துமேகண்டனத்துக்குரியவை.
சிலைகள் உடைப்பு, அயோத்தியா மண்டபம் மீதான தாக்குதல் ஆகியவை குறித்து நான் நாடாளுமன்றத்தில்பேசுவேன்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரளா தனது பிடிவாதப் போக்கை கைவிட வேண்டும். இந்தவிஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் கேரள அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
தமிழகத்திலிருந்து அரிசி உள்பட பல பொருட்களையும் பெறுவதை கேரள அரசு மறந்து விடக் கூடாது.ஒட்டுமொத்த தமிழக மக்களும் பொங்கி எழுந்தால் கேரளாவால் தாங்கிக் கொள்ள முடியாது. இப்பிரச்சினையில்திமுக, அதிமுக இரண்டுமே சரியாக செயல்படவில்லை.
இலங்கைக்கு ராணுவ ரீதியிலான எந்த உதவியையும் இந்தியா செய்யக் கூடாது. உணவு, மருந்துப்பொருட்களைக் கூட செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகத்தான் அனுப்ப வேண்டும்.
தேசிய அளவில் 3வது அணி உருவாகும் பேச்சுக்கே இடமில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அப்படியேஉருவானாலும் அந்த அணியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது.
நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நான் முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்தேன். அதேபோல, முரசொலி மாறன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர்கருணாநிதியை சந்தித்தேன்.
ஜெயலலிதாவை சந்தித்ததை வைத்து நான் அதிமுகவில் சேருவேன் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை.அதிமுகவில் சேர வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை என்றார் திருநாவுக்கரசர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications