தயானந்த சரஸ்வதி நிரபராதி: போலீஸ்
திருச்சி:ஸ்ரீரங்கம் பெரியார் சிலை உடைப்பு வழக்கில் சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றுமத்திய மண்டல ஐஜி ஜாபர் சேட் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் நிறுவப்படவிருந்த பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்துதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி சுவாமி தயானந்த சரஸ்வதி மீது முதல் தகவல்அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இச் செய்தியை மத்திய மண்டல ஐஜி ஜாபர் சேட் மறுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர்கூறுகையில், சுவாமி தயானந்த சரஸ்வதி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் என்பவர் புகார் கொடுத்தார். அதில் பெரியார் சிலையை உடைக்க, இந்துமக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத், சுவாமி தயானந்த சரஸ்வதி, கிருஷ்ணமாச்சாரி, முரளிஆகியோர் தூண்டுதலாக இருந்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
யார் புகார் கொடுத்தாலும் அதன் அடிப்படையில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். சரவணன்கொடுத்த புகாரை விசாரித்துப் பார்த்ததில் தயானந்த சரஸ்வதிக்கு இதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோதொடர்பு இல்லை எனத் தெரிய வந்தது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்வதோ, நடவடிக்கையோஎடுப்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் அர்ஜூன் சம்பத்துக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதுதொடர்பாகவிசாரணை நடந்து வருகிறது. அவர் தவிர மாநில துணை பொதுச் செயலாளர் ராகவன், கோவை மாவட்டதுணைத் தலைவர் மாணிக்கம், இளைஞர் அணி செயலாளர் ராஜஸ்தான், கோவை மாவட்ட பொதுச் செயலாளர்செந்தில்குமார், மதுக்கரை யூனியன் செயலாளர் சுஜித், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முரளி, கிருஷ்ணாச்சாரி ஆகியோர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றார் ஜாபர் சேட்.
இதற்கிடையே, கோவை மாவட்டம் ஆணைக்கட்டி பகுதியில் உள்ள தயானந்த சரஸ்வதியின் ஆர்ஷ வித்யாகுருகுலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில்போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
