மன நல டாக்டரை கடத்திய ஆயுர்வேத டாக்டர்
சென்னை:தன்னை விட அதிக அளவில் வருமானம் பார்ப்பதால் ஆத்திரமடைந்த ஆயுர்வேத டாக்டர், தனதுமருத்துவமனையில் வேலை பார்த்து வந்த மன நல மருத்துவரை கடத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
சென்னை நந்தனம், சி.ஐ.டி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ராம்குமார். இவரது தனது மனைவி, குழந்தைகள் மற்றும்பெற்றோருடன் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், நான் மன நல மருத்துவம் தொடர்பாக படித்துள்ளேன். மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்க சிகிச்சைஅளித்து வருகிறேன். என்னிடம், நீலாங்கரையைச் சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் பார்த்தசாரதி வந்தார்.
தனது மகன் பிரசாந்த் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும், அவரைக் காப்பாற்றித் தருமாறும்கேட்டுக் கொண்டார். நானும் பிரசாந்த்துக்கு வைத்தியம் பார்த்து குணப்படுத்தினேன்.
இதனால் பார்த்தசாரதிக்கு என்னைப் பிடித்துப் போனது. இதையடுத்து தனது மருத்துவமனையில் வந்து டாக்டராகபணியாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டதால் நானும் அங்கு சென்று மருத்துவம் பார்த்து வந்தேன்.
இந்த சமயத்தில், எனக்கு அதிக அளவில் நோயாளிகள் வரத் தொடங்கினர். பார்த்தசாரதியிடம் நோயாளிகள்செல்வது குறையத் தொடங்கியது. இதுதவிர நான் தனியாகவும் சிகிச்சை மற்றும் மன நல ஆலோசனைகள் செய்துவந்தேன்.
இதனால் என் மீது பார்த்தசாரதிக்கு பொறாமையும், கோபமும் ஏற்பட்டது. உடனடியாக என்னைமருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு கூறினார். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி பிரசாந்த்தும், இன்னும்சிலரும் என்னை கார் மூலம் கடத்தினர்.
நீலாங்கரையில் உள்ள ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்று அங்கு நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்தனர். பின்னர்போதையை ஊசியையும் எனக்குப் போட்டு விட்டனர். 2 நாட்கள அங்கு அடைபட்டுக் கிடந்தேன்.இதுதொடர்பாக எனது மனைவி மீனாட்சி போலீஸில் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
8ம் தேதி பிரசாந்த் போதை ஊசி போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அதைப் பயன்படுத்தி நான் தப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார் டாக்டர் ராம்குமார். இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் ஆணையர் ஜாங்கிட்உத்தரவிட்டார். விசாரணைக்குப் பின்னர் டாக்டர் பார்த்தசாரதி, அவரது மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications