திமுகவில் பூலித் தேவன் வாரிசு கோமதி முத்துராணி

Subscribe to Oneindia Tamil

Goomathi Muthulrani duraichiசென்னை:மன்னர் பூலித் தேவனின் வாரிசும், நெற்கட்டும் சேவல் ஜமீன்தாருமான கோமதி முத்துராணி துரைச்சி, திடீரெனதிமுகவில் இணைந்துள்ளது தென் மாவட்ட முக்குலத்தோர் மத்தியில் பெரும் வியப்பலைகளைஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நெல்கட்டும் சேவலை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் பூலித் தேவன்.ஆண்டுதோறும் பூலித்தேவனின் பிறந்த நாளை முக்குலத்தோர் இனத்தவர் வெகு விமரிசையாக கொண்டாடுவதுவழக்கம்.

பல ஆண்டுகளாகவே இந்த விழா சாதாரணமாகத்தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் சசிகலாவின் கணவர்நடராஜன், ஆர்வம் காட்டத் தொடங்கிய பிறகு இந்த விழா முக்குலத்தோரின் அடையாள விழாவாக, பிரமாண்டவிழாவாக மாறிது.

ஆண்டுதோறும் திரையுலகில் உள்ள முக்குலத்தோர் சமூகத்தினரை அழைத்து வருவார் நடராஜன். இயக்குனர்பாரதிராஜா, நடிகர்கள் விவேக், செந்தில், அருண் பாண்டியன் என பலரும் இங்கு வந்து சென்றுள்ளனர். சமீபத்தில்நடந்த பூலித் தேவன் பிறந்த நாள் விழாவில், நடிகர் கார்த்திக்கை வரவழைத்து பெரும் கூட்டத்தைக் கூட்டிக்காட்டி அசத்தினார்.

நடராஜனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்ததால், துரைச்சியும் அதிமுகவுக்கு ஆதரவானவர் என்ற கருத்துபரவியது. இதனால் இந்தப் பகுதி முக்குலத்தோரின் வாக்குகள் கணிசமாக அதிமுகவுக்கு கிடைத்தது.

இந் நிலையில்தான் திடீரென திமுகவில் சேர்ந்து நடராஜனுக்கும், அதிமுக தரப்புக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்துரைச்சி.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாசுதேவநல்லூர் யூனியன் கவுன்சிலராக சுயேச்சையாகப் போட்டியிட்டுவெற்றி பெற்ற துரைச்சி, யூனியன் தலைவராகவும் வெற்றி பெற்றுள்ளார். அதன் பின்னர் அவர் கடந்த வாரம்சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்து விட்டார்.

துரைச்சியின் இந்த செயலால் நடராஜனும் தென் மாவட்ட அதிமுக ஆதரவு முக்குலத்தோர் இன தலைவர்களும்பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துரைச்சியை திமுகவுக்கு இழுத்ததில் நெல்லை மாவட்ட அமைச்சரும் முக்குலத்தோர் சமூக விஐபியுமானகருப்பசாமி பாண்டியனுக்கு முக்கிய பங்குண்டு என்கிறார்கள்.

துரைச்சி குடும்பத்தினருக்கு திமுக புதிதில்லையாம். ராணியின் தந்தை உள்ளமுடையோர் மகாராஜா, அவரதுதந்தை பூலித்துரை மகாராஜா ஆகியோர் திமுகவுக்காக இருந்துள்ளனர்.

மேலும் பூலித் தேவருக்கு சிலை, அவரது பெயரில் கல்யாண மண்டபம் ஆகியவற்றை கட்டியது கருணாநிதி தான்,எனவே நாங்கள் திமுகவில் இணைந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்கிறது துரைச்சி தரப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+