ஜார்க்கண்ட்: ரயிலைக் கடத்திய நக்சலைட்டுகள்
ஜாம்ஷெட்பூர்:ஜார்க்கண்ட் மாநிலம் கனுஹாஹலி என்ற இடத்தில் துப்பாக்கி முனையில் பயணிகள்ரயிலைக் கடத்திய மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அந்த ரயிலை சுமார் 2 மணி நேரம்காட்டுப் பகுதியில் நிறுத்தி வைத்து, போலீஸாரின் ஆயுதங்களைப் பறித்துக் கொண்டபின்னர் விடுவித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோ தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டாடா நகர் மூகாரக்பூர் இடையிலான ரயிலைநேற்று 30 பேர் கொண்ட மாவோ கும்பல் கனுஹாஹலி என்ற இடத்தில் வழிமறித்துநிறுத்தியது.
பின்னர் ரயிலுக்குள் ஏறிய நக்சலைட்டுகள், ரயிலில் இருந்த ரயில்வே போலீஸாரைஅடித்து உதைத்து அவர்களிடமிருந்த துப்பாக்கிகள், வாக்கி டாக்கிகளைப் பறித்துக்கொண்டனர். பின்னர் ரயிலை ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநில எல்லையில் உள்ளஒரு காட்டுப் பகுதிக்கு அருகே கொண்டு சென்றனர்.
அங்கு ரயிலை சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைத்திருந்த அவர்கள் பின்னர்ரயிலிருந்து இறங்கிச் சென்று விட்டனர். நக்சலைட்டுகள் போன பின்னரேபயணிகளுக்கு உயிர் வந்தது.
அதன் பின்னர் ரயிலைக் கிளப்பி சகுலியா ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.அங்கிருந்த ரயில்வே அதிகாரிகளிடமும், ரயில்வே போலீஸாரிடம் நடந்த சம்பவம்குறித்து புகார் தரப்பட்டது.
இதேபோல, மகராஷ்டிரம் மாநிலம் நாக்பூர் அருகே மக்கள் போர்க்குழுநக்சலைட்டுகள் ஒரு சரக்கு ரயிலின் என்ஜினை தீவைத்து எரித்ததால் அங்கு பதட்டம்ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications