தமிழக கைதிகளுக்கு கோழிக் கறி சாப்பாடு
சென்னை:தமிழக சிறைச் சாலைகளில் உள்ள கைதிகளுக்கு கோழிக் கறியுடன் உணவு வழங்கும்முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் மொத்தம் 9 மத்திய சிறைகள், 2 பெண்கள் சிறைகள் உள்பட மொத்தம்133 சிறைச் சாலைகள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 19 ஆயிரம் கைதிகள்அடைக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளுக்கு ஆரம்ப காலம் முதலே ஒரு கப் சாதமும், ஒரு கப் சாம்பாரும் மட்டுமேவழங்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி வாரம் ஒரு முறை கோழிக்கறியுடன் சாப்பாடுவழங்க முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டார்.
அதன்படி தமிழக கைதிகளுக்கு வாரம் ஒருமுறை 115 கிராம் கோழிக் கறி, ஒரு கப்குழம்பு, 650 கிராம் சாதம், மோர் ஆகியவற்றுடன் கைதிகளுக்கு சாப்பாடு தரப்படும்.சைவ உணவுக்காரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் சாதம், சாம்பார், மோருடன்கூடுதலாக அல்வா, ரவா கேசரி, உருளைக் கிழங்கு மசாலாக் கூட்டு, ஒருவாழைப்பழம் வழங்கப்படும்.
கோழிக்கறி உணவு வழங்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. சிறைத் துறைகூடுதல் டிஜிபி பாலச்சந்திரன் சென்னை மத்திய சிறையில் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்து உணவு பரிமாறி அதை கைதிகளுக்கு வழங்கினார்.
முன்னதாக கூடுதல் டிஜிபி பாலச்சந்திரன், டிஐஜி செந்தூர்பாண்டியன், எஸ்.பி.துரைசாமி ஆகியோர் கோழிக் கறியையும், குழம்பையும் ருசி பார்த்தனர். கோழிக் கறி திட்டத்துக்காக ஒரு கைதிக்கு 8 ரூபாய் 45 பைசா செலவாகிறது. சைவஉணவுக்காரர்களுக்கு 5 ரூபாய் 85 பைசா செலவாகும். அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 87லட்சத்து 90 ஆயிரம் செலவாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications