பெரியாறு அணை: அதிமுகவுக்கு வாசன் அறிவுரை
சென்னை:முல்லைப் பெரியாறு அணை போன்ற உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளில் அதிமுகபோன்ற கட்சிகள் பொறுப்புணர்வுடன், பொறுமை காத்து நடந்திட வேண்டும் எனமத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், தமிழக அரசு கூட்டியஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இப்பிரச்சினையை படிப்படியாகத் தீர்க்க அனைத்துக்கட்சிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த ஒப்புதலை அதிமுகவும்தான்கொடுத்தது.
இப்போது இப்பிரச்சினையை அரசியலாக்க முனைவது சரியான செயல் அல்ல.அதிமுக போன்ற பொறுப்பான எதிர்க்கட்சிகள், இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமானவிஷயத்தில் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
ஆனால் பெரியாறு அணை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திசை திருப்பும் வகையில்பேசியும், அறிக்கைகள் வெளியிட்டும் வருவது கண்டனத்துக்குரியது. இந்தபிரச்சினையில், இந்த நேரத்தில் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டியதுஒவ்வொருவரின் குறிப்பாக எதிர்க்கட்சியினரின் கடமையாகும்.
அமைச்சர்கள் மட்டத்தில் டெல்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமூகதீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.பெரியார் சிலையை தகர்த்ததும், அதைத் தொடர்ந்து இந்துக் கோவில்கள் மீது நடந்ததாக்குதல்களும் தவறானவை. வன்முறைக்கு இடம் கொடுக்காத வகையில் போலீஸார்முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடந்து கொண்டு, விஷமிகளை கைது செய்யவேண்டும் என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications