இந்து மக்கள் கட்சி பொ. செயலருக்கு குண்டாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:பெரியார் சிலை இடிப்பு குறித்தும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும்வகையிலும் பேசியதாக கூறி இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்ஜெயசங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை இடிப்பு வழக்கில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர்கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் தொடர்பான வழக்கில் இவர் கைது செய்யப்படவில்லை. மாறாக,சென்னையில் பெரியார் சிலை இடிப்பு தொடர்பாக நடந்த கூட்டத்தில் அவர்பேசுகையில், பெரியாரை அவமதிக்கும் வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம்ஏற்படும் வகையிலும் பேசியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது அரசினர் தோட்ட காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை போலீஸார் ஜெயசங்கரை கைது செய்தனர்.இதுதொடர்பாக மேலும் 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தலைவர் தலைமறைவு:

இந்நிலையில் பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமறைவாகியுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை இடிப்பு வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், தயானந்த சரஸ்வதி சுவாமிகள், புனிதப்பயணம் அமைப்பை சேர்ந்தகிருஷ்ணமாச்சாரி, முரளிரெங்கன் ஆகியோர் மீது திகவினர் புகார் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் இதில் தயானந்த சரஸ்வதிக்குதொடர்பு இல்லை என தெரிவித்தனர். மேலும் அர்ஜூன் சம்பத், கிருஷ்ணமாச்சாரி,முரளிரெங்கன் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது 3 பேரின் மீதான புகார் உண்மை என தெரிய வந்தால் 3 பேரும்கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந் நிலையில் 3 பேரும்தலைமறைவாகிவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+