யோபு மனைவி 1 கோடியுடன் சிங்கப்பூர் ஓட்டம்
சென்னை:போலி பிஷப் யோபு சரவணனின் மனைவி அமுதா, ரூ. 1 கோடி பணத்துடன் சிங்கப்பூருக்கு தப்பி ஓடி விட்டதாகபோலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இலவச வீடு கட்டித் தரும் திட்டம் என்று கூறி தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாமுழுவதும் நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தைக் கறந்து மோசடி செய்து தப்பிதலைமறைவான யோபு சரவணன் சமீபத்தில் போலீஸ் வசம் சிக்கினார்.
அவரிடமிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட கிரீடம், செங்கோல் உள்ளிட்ட பல பொருட்களை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். அவர் புதைத்து வைத்திருப்பதாக கூறப்படும் கோடி கோடியான பணத்தையும் பறிமுதல் செய்வதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக முருகேசன், பால சஞ்சீவி, ராமநாதன் ஆகியோரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.அவர்களைப் பிடிக்க ஐஜி துக்கையாண்டி, டிஐஜி குணசீலன், டி.எஸ்.பி. சந்திரபாசு ஆகியோர் தலைமையில்தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணையில் ஒரு முக்கியத் தகவல் கிடைத்தது. சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட்உரிமையாளர் ஒருவரது உதவியுடன் மோசடியாக வந்த கருப்புப் பணத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த மகேஷ்என்பவருக்கு அனுப்பி வைத்து அவர் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்தப் பணம் யோபுவின்பொறுப்பில்தான் இருந்தது.
தலைமறைவான பின்னர் இந்தப் பணம் குறித்தும் தகவல் இல்லை. ஆனால் இப்பணத்தை தனது 2வது மனைவிஅமுதாவிடம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். காரணம், 3 மனைவிகள்இருந்தாலும் கூட யோபுவுக்கு அமுதாவின் மீது தனிப் பிரியம் உண்டாம். எனவே அவரிடம்தான் இப்பணம்இருக்கும் எனத் தெரிகிறது.
அமுதா ரூ. 1 கோடி பணத்துடன் சிங்கப்பூருக்குத் தப்பியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மற்ற இருமனைவிகளும் இதுவரை போலீஸ் வசம் சிக்கவில்லை. அவர்களும் கூட வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கக் கூடும்என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்த விவரங்களை குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் போலீஸார்கோரியுள்ளனர்.
இவர்கள் மூன்று பேரிடமும் ரூ. 30 லட்சத்துக்கும் அதிகமான நகைகளும் உள்ளன. அவற்றையும் பறிமுதல்செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள ராமநாதன் இன்னோவா கார் ஒன்றில் தமிழகத்திற்குள் சுற்றி வருவதாகபோலீஸாருக்குத் தகவல் கடைத்துள்ளது. அவரிடமும் பல லட்சம் பணம் உள்ளது. அந்தக் காரைப் பிடிக்கபோலீஸார் வலை வீசியுள்ளனர். அவரைப் பிடித்தால் யோபுவின் பல்வேறு மர்மங்கள் வெளிப்படும் என்றுபோலீஸார் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications