பெரியார் சிலை: தடை விதிக்க கோர்ட் மறுப்பு
சென்னை:ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் முன்பாக நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையைத் திறக்க இடைக்காலத் தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பான வழக்கை மதுரை கிளைக்கு மாற்றிநீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஸ்ரீரங்கத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. முதலில் நிறுவப்பட்ட சிலையின்தலை துண்டிக்கப்பட்டதால் பெரும் வன்முறை மூண்டது. தி.கவி.னர் கோவில்களைத் தாக்கவும், இந்துஅமைப்பினர் பெரியார் படம், சிலைகளைத் தாக்கவும் என கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பதட்ட நிலைநிலவியது.
இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் கோவில் அருகே பெரியார் சிலையை நிறுவக் கூடாது, அதற்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரி சிவசேனா அமைப்பின் மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் விசாரித்தனர். அப்போது வழக்குதொடர்பான ஆதாரங்களை எப்படி சேகரித்தீர்கள் என்று நீதிபதிகள் சிவசேனா வழக்கறிஞரிடம் கேட்டனர்.நகராட்சி அலுவலகத்திலிருந்து இதைப் பெற்றதாக அவர் கூறவே கோபமடைந்த நீதிபதிகள், ஏற்கனவே மதுரைகிளையில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே ஆதாரங்கள்தான் அங்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்த வழக்கின் நிலை என்ன என்பது எங்களுக்குத்தெரியும். எனவே இந்த வழக்கை மதுரைக்கு மாற்றுகிறோம். அங்கு சென்று வாதாடுங்கள் என கோபமாககூறினர்.
மேலும், பெரியார் சிலையை நிறுவ தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.












Click it and Unblock the Notifications