அக்கா கல்யாணத்திற்குத் தடை: தங்கை தற்கொலை
சென்னை:தான் அழகாக இருந்ததால் அக்காவின் திருமணம் தடைபடுவதை எண்ணிவருத்தமுற்ற தங்கை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அரும்பாக்கத்ச்ை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பானுமதி.இவர்களுக்கு பிரேமா, மீனாட்சி என்ற மகள்களும், குமார் என்ற மகனும் உள்ளனர்.
பிரேமாவை விட மீனாட்சி சற்று அழகாக இருப்பார். இதனால் பிரேமாவைப் பெண்பார்க்க வருபவர்கள் எல்லாம் மீனாட்சியையே விரும்பினர். இதனால் பிரேமாவின்திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.
இதனால் பிரேமா மனம் உடைந்தார். அவரது வருத்தத்தைப் பார்த்து மீனாட்சியும்மனம் உடைந்தார். தன்னால்தானே அக்காவின் திருமணம் தடைப்படுகிறது என அவர்வருந்தினார். சில நாட்களாகவே இதுகுறித்து புலம்பியவாறு இருந்தார். அவரைவீட்டினர் சமாதானப்படுத்தினர்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது மீனாட்சிக்கு. தனதுஅக்காவின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று எண்ணிய மீனாட்சிதற்கொலை முடிவை எடுத்தூர். தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார்.
வெளியில் போய் விட்டு வீடு திரும்பிய ராஜு, பானுமதி, பிரேமா ஆகியோர் மீனாட்சிதூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரைமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே மீனாட்சி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அக்காவின் நலனுக்காக தங்கை தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டசம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications