திமுக ஆட்சியில் பங்கு கோரும் எஸ்ஆர்பி!
சென்னை:தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவை அமைக்க வேண்டும், திமுக ஆட்சியில் காங்கிரசுக்கும் பங்களிக்கவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், வாசனின் தீவிர ஆதரவாளருமான மூத்த காங்கிரஸ் தலைவருர்எஸ்ஆர்.பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவின் கண்ணப்பனிடம் தோற்றார் எஸ்ஆர்பி. அதிலிருந்து அமைதியாகவேஇருந்து வருகிறார். இந் நிலையில் திடீரென முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசிய அவர் பின்னர்நிருபர்களிடம் கூறுகையில்,
முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். கொப்பறை தேங்காய் கொள்முதல் விலை மிகவும் குறைவாகஇருப்பதால் விவசாயிகள் கஷ்படுகிறார்கள். எனவே ஒரு கிலோ கொப்பறை தேங்காய்க்கு கொள்முதல் விலைரூ.40 கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கருணாநிதியிடம் கூறியுள்ளேன்.
இலங்கை தமிழர்கள் அனைத்து உரிமையும் பெற்று வாழவேண்டும். விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில்உச்சிபுளி வழியாக பொருட்கள் செல்கின்றன. இது தமிழக அரசுக்கு தெரியாமல் நடந்துள்ளது வியப்பாகஇருக்கிறது.
கருணாநிதி மத்திய அரசுக்கு எல்லா விஷயங்களிலும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார். எனவேபுலிகள் விஷயத்திலும் தமிழக அரசு விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். ஜெயலலிதா அரசியல் மாற்றம் வரும்என்று கூறி வருகிறார். ஆனால் அப்படி எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பே இல்லை.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தோழமை உணர்வுடன் இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவைஅமைக்க வேண்டும் என்ற கருத்தை மேலிடத்துக்கு தெரிவித்துவிட்டோம். இது குறித்து கருணாநிதியும், சோனியாகாந்தியும் தான் முடிவு எடுக்க வேண்டும்.
தமிழ்மொழியை ஆட்சி மொழியாக அமல்படுத்த கோரி டாக்டர் ராமதாஸ் போராட்டம் நடத்துவதைவரவேற்கிறேன் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications