க.ப.அவுக்கு திருவள்ளுவர், மணியனுக்கு பாரதி!
சென்னை:நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், தமிழறிஞருமானக.ப.அறவாணனுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், சிறந்த தமிழறிஞருமானக.ப.அறவாணன் ஏறத்தாழ 60 நூல்களை எழுதியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட அயல்நாடுகளுக்குப் பயணம்செய்து தமிழ்த் தொண்டாற்றியுள்ளார்.
சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் விருதுகளுடன் பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது சிறப்புக்களையும், ஆற்றலையும் பாராட்டும் வகையில், 2007ம் ஆண்டின் திருவள்ளுவர் விருதுஇவருக்கு வழங்கப்படுகிறது. திருவள்ளுவர் திருநாளான 16.1.2007 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில், விருதும்,ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் அவருக்கு அளிக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
க.ப.தமிழ்வாணன் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் தவிர ஆங்கிலம்,மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட பல்வேறு மொழிகளைக் கற்றறிந்தவர்.
பல்வேறு ஆராய்ச்சி ஏடுகளின் உறுப்பினராகவும், பொறுப்பாளராகவும் உள்ளார்.
தமிழருவி மணியனுக்கு பாரதியார் விருது:
இதற்கிடையில் தமிழக அரசின் திட்டக் குழு உறுப்பினரான தமிழருவி மணியனுக்கு இந்த ஆண்டுக்கானபாரதியார் விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசின் திட்டக் குழு உறுப்பினராக இருக்கும தமிழருவி மணியன் சொற்பொழிவுகளில் சிறந்துவிளங்குபவர். அவருக்கு சொல்லாற்றல் மற்றும் தமிழாற்றலைப் பாராட்டி அவருக்கு 2006ம் ஆண்டுக்கானபாரதியார் விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அவருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், 1 சவரன் பதக்கம் ஆகியவை வழங்கப்படும் எனவும் அந்த செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணியன், மிக நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர். ஊழலை அடியோடுவெறுக்கும் மிக அபூர்வ அரசியல்வாதி. பதவி கேட்டு அலையாத கதர் சட்டைக்காரர்.












Click it and Unblock the Notifications